மீனவர்களுக்கு எதிரான..கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்யக்கூடாது..மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்யக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடலோர மீனவர் சமூகங்களின் நலன்களுக்கு எதிராக இந்த மசோதா உள்ளது என்று அவர் கூறியுளளார்.

மத்திய அரசு கடல்சார் மீன்வள மசோதா கொண்டு வர உள்ளது. இந்த மசோதா மீனவர்களுக்கு எதிராக உள்ளதாகவும், மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிராக இருப்பதாகவும் கூறி இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

மீனவர்கள் போராட்டம்

மீனவர்கள் போராட்டம்

தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இந்த மசோதாவுக்கு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் கடல்சார் மீன்வள மசோதா கொண்டு வரக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டாலின் கடிதம்

ஸ்டாலின் கடிதம்

மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள், கடலோர மீனவர் சமூகங்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது மசோதாவின் உட்பிரிவுகள் மீனவர்களுக்கு எதிராக உள்ளதால் அமைதியின்மை மற்றும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களுக்கான உரிமைகளை மீறும் சில உட்பிரிவுகளை மசோதா கொண்டுள்ளது என்று கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுளளார்.

அனைத்தும் எதிராக...

அனைத்தும் எதிராக...

இந்த மசோதாவில் உள்ள சில பிரிவுகளில், மீனவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துதல், சிறையில் அடைத்தல், மீனவர்களுக்கு எதிராக வலிய நடவடிக்கைகளை எடுத்தல் கட்டணங்களை விதிப்பது, பெரும் அபராதங்களை விதிப்பது போன்ற மீனவர்களுக்கு எதிரான உட்பிரிவுகள் அடங்கி இருக்கின்றன என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

விவாதம் வேண்டும்

விவாதம் வேண்டும்

அனைத்துத் தரப்பு மக்களுடன் விவாதம் மற்றும் ஆலோசனைகள் நடத்தியபிறகு, அவர்களின் கருத்துகளைப் பெற்று, மீனவர் நலன் காக்கும் வகையிலும், கடல் வளத்தைக் காக்கும் வகையிலும், புதியதொரு மசோதாவை நாடாளுமன்றத்தில் பின்னர் தாக்கல் செய்யலாம் என்று மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டலைன் தெரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+