அதெல்லாம் இல்ல! மேட்டரே வேறயாம்.. 2 நாளில்.. முதல்வர் ஸ்டாலின் சொல்ல போகும் "அந்த" நல்ல செய்தி என்ன?
சென்னை: இன்னும் 2 நாட்களில் முக்கியமான நல்ல செய்தி ஒன்றை வெளியிடுவேன் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பல யுகங்களுக்கு வழி வகுத்துள்ளது.
சென்னை 45-வது புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்து நேற்று சென்னையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இன்னும் 2 நாட்களில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுவேன் என்று கூறினார். ஒரு முக்கியமான நல்ல செய்தியை கூறுவேன்.
இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இப்போது நான் நலத்திட்டங்கள், அறிவிப்புகள் எதையும் வெளியிட கூடாது. அது தேர்தல் விதி மீறலாக இருக்கும்.

ஸ்டாலின் அறிவிப்பு
தேர்தல் விதிமுறைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். தேர்தல் முடிந்ததும் நான் முக்கியமான அந்த நல்ல செய்தியை சொல்வேன். இவ்வளவு நாள் பொறுத்திருந்தீர்கள். அதற்கு நன்றி. இன்னும் 2 நாட்கள் மட்டும் பொறுத்திருங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு பல யுகங்களுக்கும், விவாதங்களுக்கும் வழி வகுத்துள்ளது.

உரிமை தொகை
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட போகும் அந்த நல்ல செய்தி என்பது குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் என்று முதலில் தகவல்கள் வந்தன. திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட இந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த வாக்குறுதி பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் பலர் இதனால் திமுக மீது கொஞ்சம் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிருப்தி
எதிர்க்கட்சிகள் இதை வைத்து விமர்சனம் செய்து வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் முதல்வர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி அறிவிப்பை வெளியிடலாம் என்று செய்திகள் வந்தன. ஆனால் தலைமை செயலக வட்டாரத்தில் விசாரித்ததில் அதெல்லாம் இல்ல! மேட்டரே வேற என்கிறார்கள் சில டாப் அதிகாரிகள். ஆம், குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் மாதம் மாதம் கொடுக்கும் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். அதை பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு வரலாம்.

பட்ஜெட் அறிவிப்பு
பட்ஜெட்டுக்கு முன் நிதி நிலை அறிக்கை வெளியாகும். அதன்பின் இந்த அறிவிப்பு கண்டிப்பாக வெளியாகும். அதை முதல்வரே ஏற்கனவே பிரச்சாரத்தில் கூறிவிட்டார். இதை பற்றி பிரச்சாரத்தில் பல முறை முதல்வரே பேசிவிட்டார். அதில் எதுவும் சர்ப்ரைஸ் இருக்க போவது இல்லை. ஆனால் முதல்வர் 2 நாளில் வெளியிட போகும் அந்த நல்ல செய்தி வேறு ஒன்று.. உரிமை தொகை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசவில்லை. அவர் சொல்லும் அந்த நல்ல அறிவிப்பு வேறு ஒன்று என்று தலைமை செயலக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
Recommended Video

வேறு ஒன்று
அந்த அறிவிப்பு கண்டிப்பாக மக்கள் பல நாளாக வைத்த கோரிக்கை ஒன்றாக இருக்கும். இது அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பாகவும் இருக்காது என்கிறார்கள். இது மக்கள் நலத்திட்டம் சார்பான ஒரு அறிவிப்பாக இருக்கும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நேரத்தில் இந்த தகவல் கசிந்தால் கூட அது தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தும். ஆளும் கட்சிக்கு தேர்தல் விதி ரீதியான பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் இதை அரசு அதிகாரிகள் டாப் சீக்ரெட்டாக வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications