சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேசிய அளவில் எழுந்த விவாதம்.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன "ஒற்றை" வார்த்தை.. வரிசைகட்டும் மாநில அரசுகள்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு ஒன்றிய அரசு என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி வரும் நிலையில், மற்ற மாநில அரசுகளும் இதற்கு இணையான வார்த்தையை பயன்படுத்தும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன இணையத்தில் இது தொடர்பான தொடர் விவாதங்கள் நடந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து முதல்வர் ஸ்டாலினும், திமுக அமைச்சர்களும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். அதிமுக அரசு மத்திய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்திய நிலையில் தற்போது திமுக அரசு ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறது.

பாஜகவினர் மத்தியில் இந்த வார்த்தை கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றியம் என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாஜக கூறி வருகிறது.

சட்டசபையில் கேள்வி கணைகளால் துளைக்கும் செந்தில் பாலாஜி.. பதில் இன்றி தவிக்கும் முன்னாள் அமைச்சர்கள் சட்டசபையில் கேள்வி கணைகளால் துளைக்கும் செந்தில் பாலாஜி.. பதில் இன்றி தவிக்கும் முன்னாள் அமைச்சர்கள்

விளக்கம்

விளக்கம்

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டசபையில் அளித்த விளக்கத்தில், ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாச்சி தத்துவம் அடங்கி உள்ளது. மாநிலங்கள் அனைத்தும் இணைந்து உருவான ஒன்றியம்தான் இந்தியா. இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் இதுதான் உள்ளது. 1957ம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே ஒன்றியம் என்ற வார்த்தை இருந்தது.

இனி இப்படித்தான்

இனி இப்படித்தான்

மத்திய அரசை இனி ஒன்றிய அரசு என்றுதான் அழைப்போம். இந்த வார்த்தையை மட்டுமே இனி பேட்டிகளில், அறிக்கைகளில் பயன்படுத்துவோம். இனி எப்போதுமே ஒன்றியம் என்றுதான் குறிப்பிடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த பயன்பாடு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

மற்ற

தேசிய அளவில் மாநில சுயாட்சி கொள்கை கொண்டவர்கள், central government என்ற வார்த்தைக்கு பதில் union government என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இதே போன்று யூனியன் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

யூனியன்

கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பலர் இதே கோரிக்கையை வைக்க தொடங்கி உள்ளனர். தங்கள் மாநில அரசுகளும் central என்ற வார்த்தைக்கு பதில் union என்று அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

தேசிய ஊடகம்

தேசிய அளவில் இந்த செய்தியை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட நிலையில் மற்ற மாநிலங்களிலும் union vs central என்ற விவாதம் எழுந்துள்ளது. மாநில சுயாட்சி பேசும் மற்ற மாநிலங்களும் இதே வார்த்தை பிரயோகத்தை உபயோகிக்கும் சூழ்நிலை தற்போது எழுந்துள்ளது. பொதுவாக மாநில உரிமைகளில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடுதான் எப்போதும் முன்னோடியாக இருக்கும், இந்த முறையும் அதே போன்ற விவாதத்தை தமிழ்நாடு தொடங்கி வைத்துள்ளது.

English summary
TN CM Stalin's stand on Ondriam creates nationwide discussion on Union vs Center usuage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X