இனி காமர்ஸ் பிரிவில் படித்த மாணவர்களும்.. பாலிடெக்னிக் படிப்பில் நேரடியாக 2ஆம் ஆண்டில் சேரலாம்!
சென்னை: +2 பொதுத் தேர்வில் வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் 2025- 26 ஆம் கல்வியாண்டில், பாலிடெக்னிக்கில் நேரடி 2 ஆம் ஆண்டு (Lateral Entry) சேர முடியும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
கணிதம் - அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள் மட்டுமே பாலிடெக்னிக்கில் நேரடியாக 2 ஆம் ஆண்டு சேர முடியும் என்ற விதி தளர்த்தப்பட்டு, அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் சேரலாம் என விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பாலிடெக்கிக் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டில் முதலாவது ஆண்டு படிக்க உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது.
சிவில் (civil), மெக்கானிக்கல் (Mechanical), எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (Electrical and Electronics), எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் (Electronics & Communication) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு (SSLC/Matriculation) தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாணவ மாணவியர்கள்: https://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் மாவட்ட சேவை மையங்கள் (TNEA Facilitation Centre) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பதிவு கட்டணம்
பதிவுக் கட்டணமாக ரூ150/-யை விண்ணப்பதாரர் Debit Card /Credit Card/Net Banking இணையதள வாயிலாக செலுத்தலாம். SC/ST பிரிவினருக்கு பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை.
முதலாமாண்டு பட்டயப் படிப்பிற்கான இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள்: 07.05.2025
முதலாமாண்டு பட்டயப் படிப்பிற்கான இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்: 23.05.2025
காமர்ஸ் மாணவர்களும்
+2 பொதுத் தேர்வில் வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் 2025- 2026 ஆம் கல்வியாண்டில், பாலிடெக்னிக்கில் நேரடி 2 ஆம் ஆண்டு (Lateral Entry) சேர முடியும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
கணிதம் - அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள் மட்டுமே பாலிடெக்னிக்கில் நேரடியாக 2 ஆம் ஆண்டு சேர முடியும் என்ற விதி தளர்த்தப்பட்டு, அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் சேரலாம் என விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுவரை, கணிதம், இயற்பியல், வேதியியல் படித்தவர்கள் மட்டுமே டிப்ளமோ படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது, இனி காமர்ஸ் மாணவர்களும் நேரடியாக டிப்ளமோ படிக்கலாம் என்றும், இரண்டாம் ஆண்டில் சேரலாம் என்றும் கூறப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications