கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2021 சட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜகவின் முகங்களாக அறியப்பட்ட நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் போட்டியிட்ட நெல்லை, அரவக்குறிச்சி, கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகள் மீண்டும் பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளான நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் தொகுதி மாறுவது உறுதியாகி இருக்கிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் குறித்த அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமே ஒன்றுக்கும் அதிகமான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜக வலிமையாக இருக்கும் சென்னை, கோவை, நாமக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 1 தொகுதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Nainar vs Annamalai vs Vanathi

இதனிடையே தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகள் இம்முறை ஒதுக்கப்படவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். அதேபோல் நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிட்டு வென்றார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அதேபோல் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் போட்டியிட்ட தாராபுரம் தொகுதியும் இம்முறை பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாக தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளான நயினார் நாகேந்திரன், எல்.முருகன், வானதி சீனிவாசன், அண்ணாமலை உள்ளிட்ட பலரும் தொகுதி மாறுவது உறுதியாகி இருக்கிறது.

நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியிலும், எல்.முருகன் அவிநாசி தொகுதியிலும் போட்டியிடுவதாக தெரிகிறது. அதேபோல் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட தமிழிசை செளந்தரராஜன், வினோஜ் பி செல்வம், எஸ்ஜி சூர்யா உள்ளிட்டோர் தயாராகி வருகின்றனர்.

அதேபோல் விளவங்கோடு தொகுதியில் மீண்டும் விஜயதரணிக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவாரா என்ற கேள்வி உள்ளது. வாசுதேவநல்லூர் தொகுதியில் ஆனந்தன் அய்யாசாமி போட்டியிடுவதும் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. நாகர்கோயில் தொகுதியிலும் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+