TN Engineering Counselling: பொறியியல் கலந்தாய்வு தேதி தள்ளி போக காரணம்.. பொன்முடி சொன்ன தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023-24ஆம் ஆண்டு பொறியியல் கலந்தாய்வுக்கான தேதி ஜூலை 2ஆம் தேதிக்கு பதிலாக வேறு தேதியில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இளநிலை மருத்துவ கலந்தாய்வு தேதி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பொறியியல் கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

பி.இ., பி.டெக் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி மதியம் 12 மணிக்கு வெளியிடுகிறார்.

 TN Engineering Counselling 2023 postpone says Minister Ponmudi

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக்., பி.ஆர்க்.‌ பட்டப் படிப்புகளில் இணைவதற்கு, கடந்த மே 5ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டது. இதில், 2, 29,167 மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்து, அவற்றில் 1,87,693 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர்.

கடந்த ஜூன் 4ம் தேதி வரை சுமார் 1,55,124 மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதனையடுத்து மாணவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. விளையாட்டுப்பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பானது கடந்த 14ம் தேதி வரை நேரடியாக நடைபெற்றது.

அனைத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில் பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாணவர்கள் தரவரிசை பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30ம் தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது.

தரவரிசை பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி பொறியியல் கலந்தாய்வு தேதி தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக கூறினார். ஜூலை இரண்டாம் தேதி தொடங்குவதாக இருந்த பொறியியல் படிப்பு கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வு இன்னும் தொடங்காததால் பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருப்பதால் பொறியியல் கலந்தாய்வு தள்ளிப் போக வாய்ப்புள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியானாலும் கலந்தாய்வு இன்னும் தொடங்கவில்லை.

மருத்துவத்தை படிக்க விரும்பும் மாணவர்கள் பொறியியலில் சேர்ந்து பின் விலகுவது அவர்களுக்கு சிரமத்தை கொடுக்கும். எனவே மருத்துவ கலந்தாய்வு முதல் கட்டம் தொடங்கிய பின், பொறியியல் கலந்தாய்வு தொடங்கலாம் என ஆலோசிக்கிறோம் என்று கூறினார். 102 மாணவ மாணவிகள் 200கக்கு 200 கட் ஆஃப் பெற்றுள்ளனர். இவர்களில் திருச்செந்தூர் மாணவி நேத்ரா கட் ஆப்பில் முதலிடம் பெற்றுள்ளார் என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். முன்னாதாக ஆகஸ்ட் 2ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் என்று கூறப்பட்டது. பின்னர் ஜூலை 2ல் கலந்தாய்வு தொடங்கும் எனவும் ஆகஸ்ட் 28ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் எனவும் அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் கலந்தாய்வு நடைபெறும் தேதி தள்ளிபோவதால் முதலாண்டு பொறியியல் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படும் தேதியும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+