தமிழக பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22 முதல் தொடங்கும்.. 3 கட்டங்களாக நடைபெறும்..பொன்முடி அறிவிப்பு
சென்னை: பி.இ., பி டெக் படிப்பிற்காக பொறியியல் கலந்தாய்வு வரும் 22ஆம் தேதி முதல் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சிறப்பு பிரிவுக்கு 2 கட்டங்கள், பொது பிரிவிற்கு 3 கட்டங்கள் என மொத்தம் 5 கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடந்த மே 15 முதல் ஜூன் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் 6ம் தேதி வெளியான நிலையில், கடந்த மாதம் 26ஆம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

கவுன்சிலிங் எப்போது தொடங்கும் என்று பெற்றோர்களும் மாணவர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் அதற்கான அறிவிப்பினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டுள்ளார். பொறியியல் கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்கு 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.
பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் 1.78 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். 26ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். மீண்டும் 28ஆம் தேதி முதல் 3 கட்டங்களாக பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 430 கல்லூரிகளில் உள்ள 1.56 லட்சத்திற்கும் மேலான இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் 9 முதல் 22ஆம் தேதி வரை 2வது கட்ட கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை 3வது கட்ட கலந்தாய்வு நடைபெறும். வழக்கமாக 4 சுற்றுகளாக நடத்தப்படும் பொறியியல் கலந்தாய்வு, இந்த ஆண்டு 3 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வு முடிக்கப்படும். மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்பே முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் 11,804 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழகத்தில் 430 பொறியியல் கல்லூரிகளில் 1.57 லட்சம் பொறியியல் இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு 3,100 பொறியியல் இடங்கள் கூடுதலாக உள்ளன. பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க 1,78,959 பேர் விண்ணப்பித்துள்ளனர். காலியிடங்கள் இல்லாத அளவிற்கு அனைத்து இடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆண்டு ECE Advanced Technology, ECE Design and Technology ஆகிய 2 புதிய படிப்புகள் இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒரு கல்லூரியில் சேர்ந்துவிட்டு வேறு படிப்புக்கு கல்லூரி மாறினால் கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும். வரும் 21ஆம் தேதி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்கலைக்கழக பாடத்திட்டம் தொடர்பாக துணைவேந்தர்களுடன் ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications