டாஸ்மாக் வருமானத்தை மட்டுமே நம்பி செயல்பட முடியாது.. தமிழ்நாடு நிதித்துறை செயலர் கிருஷ்ணன் பேட்டி!
சென்னை: டாஸ்மாக் வருமானத்தை மட்டுமே நம்பி தமிழக அரசு எதிர்காலத்தில் செயல்பட முடியாது என்று தமிழ்நாடு நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க அரசு இன்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டது.
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 3 மணி நேரம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:- திட்டம் செய்லபடுத்தும்போது தகவல் சேகரித்து அதன் அடிப்படையில் முடிவு எடுக்கும் அரசாக தமிழ்நாடு அரசு விளங்கி வருகிறது. அரசின் சொத்துகளை சரியான முறையில் நிர்வகிப்பது என்பதற்கான முக்கியத்தும் என்பது உள்ளிட்டபல்வேறு அம்சங்களை கொண்டுள்ள ஒரு வரவு செலவு திட்டமாக இருக்கிறது.
பொது மக்களின் எதிர்ப்பார்புகள் அடிப்படையில் நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.35,000 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் வழக்கம்போல் இருக்கிறது. ஆனால் டாஸ்மாக் வருமானத்தை மட்டுமே நம்பி தமிழக அரசு எதிர்காலத்தில் செயல்பட முடியாது.
பட்ஜெட்டில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி 60 ஆகவே தொடரும். தொடர்கிறது. 2021-2022 ஆண்டு நிதியாண்டில் அரசு வாங்கிய கடனுக்கு மட்டும் ரூ.42,927 கோடி வட்டி கட்டப்படும். இவ்வாறு நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
Recommended Video
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications