ராஜேந்திரபாலாஜி கைது: தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய ஜெயக்குமார்.. பரபர பேட்டி!
சென்னை: அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக பலர் புகார் கொடுத்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Recommended Video
ராஜேந்திரபாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் அவரை கைது செய்யலாம் என்று போலீசாருக்கு அனுமதி அளித்தது. இந்த தகவல் அறிந்தவுடன் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகி விட்டார்.

ராஜேந்திரபாலாஜி கைது
8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை போலீசார் தேடி வந்தனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் அவரை போலீசார் தேடி வந்தனர். தொடர்ந்து போலீசாருக்கு போக்கு காட்டி வந்த ராஜேந்திரபாலாஜி சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் போலீசாரிடம் சிக்கினார்.

குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், 'தனிப்படை அமைத்து தேட கூடிய அளவிற்கு ராஜேந்திர பாலாஜி மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை .

ரவுடிகளை கைது செய்யவில்லை
அப்படியே தனிப்படை அமைத்து தேட வேண்டும் என்றால் தமிழகத்தில் பல ரவுடி குற்றவாளிகளை தேடி இருக்க வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு இவரை கைது செய்துள்ளனர். ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதன் மூலம் அதிமுக விற்கு கலங்கம் ஏற்படுத்த பார்பபதுதான் திமுக ஆட்சியின் நோக்கம் என்று கூறினார்

தரமற்ற பொங்கல் பரிசு
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், 'தமிழக அரசு வழங்கி வரும் பொங்கல் பரிசானது தரமற்ற நிலையில் உள்ளது. மக்கள் பலரும் இதை வாங்க ஆர்வம் காட்டவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என்றார். நீட்தேர்வு விலக்கு குறித்து கேட்ட போது, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தமிழகத்தில் இருந்து விலக்கப்படும் என்று கூறிய நிலையில் தற்போது திமுக அதை மறந்து செயல்படுகிறது என்றார்.

நீட்தேர்வு விலக்கு
அரசு ஒருபுறம் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும், மறு புறம் மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி நிலையங்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான விலைகளை குறைத்த போதிலும் மாநில அரசு இன்னும் ஏன் குறைக்கவில்லை என்றும் ஜெயக்குமார் கேள்வியை எழுப்பினார்.


Click it and Unblock the Notifications
