சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 13 புதிய பேருந்து நிலையங்கள்.. அரசு அறிவிப்பு.. இதில் உங்க மாவட்டம் இருக்கானு பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் சங்கரன்கோவில் உள்ளிட்ட 13 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரூ.424 கோடி மதிப்பில் இந்த பேருந்து நிலையங்கள் அமைய உள்ளன.

தமிழ்நாட்டில் பெருகி வரும் தேவைக்கு ஏற்ப அரசு பேருந்துகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களுக்கு போக்குவரத்து சேவையை எளிதாக்கும் வகையில் புதிய, புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

TN Goverment has announced that new bus stands will be set up at 13 places in the state

அதுவும் சிறு, சிறு நகரங்களில் அதிகமான பேருந்துகள் பெருகி விட்டதாலும், அதனை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டதாலும் அதிக அளவிலான பேருந்துகளை, மக்களை கையாள பெரிய பேருந்து நிலையங்கள் அவசியமாகிறது. இந்த நிலையில்தான் தமிழகத்தில் ரூ.424 கோடி மதிப்பில் 13 இடங்களில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பேருந்து நிலையங்கள் அமைய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சங்கரன்கோவில், திருமங்கலம், மன்னார்குடி, மயிலாடுதுறை, கடலூர், ,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திண்டிவனம், திருத்தணி, திருவண்ணாமலை, ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய 13 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம் இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்

தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படுகின்றன என்றும் இந்த புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் பணி விரைவில் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழக அரசின் அறிவிப்பால் மேற்கண்ட 13 இடங்களை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
The Tamil Nadu government has announced that bus stands will be set up at 13 places in Tamil Nadu, including Sankarankoil. These bus stands are worth Rs 424 crore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X