தீபாவளிக்கு "ஜாக்பாட்" தந்த தமிழக அரசு.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. பதவி உயர்வு + அரசாணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான அரசாணையையும் பிறப்பித்துள்ளது. இது மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மகிழ்வை தந்து வருகிறது.

தமிழக அரசு ஊழியர்கள், தங்களது கோரிக்கைகள் இதுவரை எதுவுமே நிறைவேறவில்லை என்று, மாநில அரசு மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.. மற்றொருபக்கம், 4 சதவீத அகவிலைப்படி உயர்வு கேட்டு எதிர்பார்ப்பிலும் காத்திருக்கிறார்கள்..

TN Government CM Stalin and principal educational officer transfer by Tamil nadu Government

இதுபோக, ஜாக்டோ ஜியோ உள்ளிட்டவர்களும் போராட்டத்தை கையில் எடுக்க போகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், போக்குவரத்து துறையும் கோரிக்கைகளை விடாமல் விடுத்து வருவதால், திமுக அரசுக்கு நெருக்கடி கூடிவருவதாக தெரிகிறது.

தீபாவளி பண்டிகை: இதனிடையே, தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு மாநில அரசு சில மகிழ்ச்சி அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.. அந்தவகையில், அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி, டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 சதவிகிதம் வரை போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கல்வித்துறையில் புதிய அறிவிப்பு வந்துள்ளது.. அதன்படி, தமிழகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி அலுவலர்கள்: அதாவது, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களில் பணிபுரியும் 10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.. மேலும், 7 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தற்காலிக அடிப்படையில் முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, கன்னியாகுமரியில் இருந்த முதன்மை கல்வி அலுவலருக்கு கள்ளக்குறிச்சியிலும், கள்ளக்குறிச்சி அலுவலருக்கு திருச்சியிலும் என சென்னை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பணி மாற்றம் செய்யப்படுகிறது. அதே போல, 7 மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு தற்காலிகமாக பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனை காலத்திற்கு பிறகும் பதவி உயர்வை நீடுக்கும்படி அலுவலர்கள் உரிமைகோர முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி: 7 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவர்களாக தற்காலிக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+