லட்சக்கணக்கான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு
சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.76 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் வாயப்பு உள்ளது. இதேபோல் மகாராஷ்டிராவில் லட்சக்கணக்கான ஆசிரியர்களும், ஆந்திராவில் லட்சக்கணக்கான ஆசிரியர்களும், கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களில் பல ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது. எனவே அந்தந்த மாநில அரசுகள் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.
2011ம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கண்டிப்பாக டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பணியில் தொடர முடியும் என்ற நிலை உள்ளளது. அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு தேர்ச்சி பெற தவறினால், அவர்களுக்கு இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு வேலை போகும்
இந்த உத்தரவின் காரணமாக இந்தியாவின் எல்லா மாநிலங்களுமே பாதிக்கப்பட்டுள்ளன. பல லட்சம் ஆசிரியர்கள் நாடு முழுவதும் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1,76,000 ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என சொல்லப்பட்டது. இதேபோல், தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
தமிழக அரசு ஆலோசனை
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததுமே, அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர் சங்கங்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தியது. அதில் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு டெட் தேர்வு விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்திருக்கிறது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில், 'டெட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனுதாக்கல் செய்யப்படும்' என பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பக்கத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், "ஆசிரியர் தரம் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும் மற்றும் எதிர்கால நியமனங்களுக்கு 'டெட்' ஒரு கட்டாயத் தேவையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை தமிழ்நாடு அரசு முழுமையாக ஆதரிக்கும்.
தமிழக அரசின் நிலைப்பாடு என்ன
அதே வேளையில், ஏற்கனவே பணியில் இருந்த ஆசிரியர்களுக்கு இந்த தேவையை பின்னோக்கிப் பயன்படுத்துவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரணங்களுக்காக சீராய்வு மனுதாக்கல் செய்யப்படுகிறது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய இப்போது அணுகுவோம். மேலும் இந்த பிரச்சனை சட்டம் மற்றும் அரசியலமைப்பு கொள்கைகளை மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தையும் உள்ளடக்கியது என்பதை அரசு வலுவாக முன்வைக்கும்" என்று கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் ஏற்குமா
தமிழக அரசு மட்டுமல்ல, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநில அரசுகளுமே மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து வருகின்றன. ஆனால் பொதுவாக உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு மனுவினை ஏற்பது இல்லை.. அப்படியே ஏற்றாலும், கல்வித் தரம் என்பது பொதுநலனுடன் தொடர்புடையது ஆகும். எனவே உச்ச நீதிமன்றம் முன்னுரிமை அளிக்கும். ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு உரிமையை விட, குழந்தைகளின் தரமான கல்வி உரிமைக்கு நீதிமன்றம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் நிலைமை சிக்கலாகும்.
மிகவும் சிக்கலான நிலை
அதேபோல் மறு சீராய்வு மனுவினை பொறுத்தவரை தீர்ப்பில் மிகத் தெளிவான சட்டப் பிழை அல்லது புதிய, வலுவான சான்றுகள் இருந்தால் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த வழக்கில், RTE சட்டம் தெளிவாக இருப்பதால், சட்டப் பிழைக்கான வாய்ப்பு குறைவு. எனவே மாநில அரசுகள் எப்படி இதனை கையாளப்போகின்றன என்பது ஒரு சிக்கலான விஷயம் ஆகும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications