யுபிஎஸ்சி தேர்வு எழுதுறீங்களா? நான் முதல்வன் திட்டத்தில் ரூ 75 ஆயிரம் ஊக்கத் தொகை பெறுவது எப்படி?
சென்னை: தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் இணைந்து ஊக்கத் தொகை பெற மதிப்பீட்டுத் தேர்வுக்கு யுபிஎஸ்சி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடத்தப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு படிக்கும் தேர்வர்கள் வரும் ஜூலை 27ஆம் தேதி நடக்கும் மதிப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சிறப்பு திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் முதல்வன் திட்டத்தின் (Naan Mudhalvan scheme) கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களால் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் 2023-24 க்கான தமிழ் நாடு அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்துடன் இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.
1000 பேர் தேர்வு
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1,000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும்.
முதன்மை தேர்வு எழுத தேர்வு
இத்திட்டம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2024 மற்றும் 2025 -ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வுகளில் முறையே 276 மற்றும் 315 நான் முதல்வன் ஊக்கத் தொகை பயனாளி மாணவர்கள் முதன்மைத் எழுதத் தேர்வு செய்யப் பட்டனர்.
மதிப்பீட்டு தேர்வு எப்போது
இத்திட்டத்தின்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வு-2026-க்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வை 26.07.2025 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது.
1000 தமிழக மாணவர்களுக்கு
இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.
கடந்த ஆண்டைப் போலவே, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான (ஆர்.ஏ புரம் சென்னை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை மற்றும் காமராஜர் பல்கலைக்கழகம் மதுரை) சேர்க்கை மதிப்பீடுத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி
மேற்படி பயிற்சி மையங்களைத் தேர்வு செய்வதற்கான விருப்பம் கோரும் விண்ணப்பம் பின்னர் தனியாக வெளியிடப்படும். இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை மற்றும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான சேர்க்கை பெற விரும்பும் ஆர்வமுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்து பார்த்து, 26.06.2025 அன்று முதல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.07.2025 ஆகும்.
முக்கிய நாட்கள்
- அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி - 26.06.2025
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் - 26.06.2025
- விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி - 10.07.2025
- நுழைவுச் சீட்டு வெளியீடு - ஜூலை மூன்றாவது வாரம்.
- தேர்வு நாள் - 26.07.2025 (10.00 am - 12.00 pm)
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications