ஆண்டாள் கோவில் கோபுரத்தையும் ஆளுநர் மதிக்கல.. பாஜக என்ன செய்யப்போகுதோ? சீண்டிய பத்திரிகையாளர்!
சென்னை : தேசியத்தையும் அவமதித்து, ஆண்டாள் கோபுரத்தையும் புறக்கணிப்பதுதான் ஆளுநருக்கு அழகா? தமிழ்நாடு அரசின் முத்திரையை பயன்படுத்தாமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தையே கவர்னர் தூக்கி எறிந்திருக்கிறாரே? பாஜகவினர் என்ன செய்யப்போகிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பத்திரிகையாளர் குபேந்திரன்.
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையும், தமிழ்நாடு அரசின் இலச்சினையும் தவிர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்ததும், தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே அவையில் இருந்து வெளியேறியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

ஆளுநர் சர்ச்சை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் துவங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நேற்றைய நிகழ்வில் அரசு கொடுத்திருந்த ஆளுநர் உரையில் சில பகுதிகளை ஆளுநர் ரவி வாசிக்காமல் தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் வாசித்த உரையை அவைக்குறிப்பில் ஏற்றக் கூடாது என தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றிக்கொண்டிருந்தபோதே ஆளுநர் உடனடியாக அவையில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அழைப்பிதழில் தமிழகம்
இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் முன்பே இன்னொரு சர்ச்சை எழுந்துள்ளது. வரும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, பொங்கல் விழா அழைப்பிதழை தயார் செய்து வழங்கி வருகிறது. அழைப்பிதழில் கடந்த ஆண்டு ஏப்ரலில் ஆளுநர் மாளிகை அளித்த தேநீர் விருந்து அழைப்பிதழில் தமிழ்நாடு இலச்சினை இருந்த நிலையில் இந்த ஆண்டு இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றுள்ளது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. மேலும், தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இலட்சினை இல்லை
தமிழ்நாடு அரசின் இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த ஆளுநர் விரும்பவில்லை எனத் தெரிகிறது. சில நாட்களுக்கு முன்னர், தமிழ்நாடு என்பதற்குப் பதிலாக தமிழகம் எனச் சொல்வதே சரியானது என ஆளுநர் ரவி பேசி இருந்தார். அதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இலச்சினைக்கு பதில் இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றுள்ளதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாடு அரசின் சின்னம்
தமிழ்நாடு என்ற சொல் இருப்பதால், தமிழ்நாடு அரசின் சின்னத்தையே ஆளுநர் ரவி பயன்படுத்தாமல் தவிர்த்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநருக்கு ஆதரவாக நின்று திமுக அரசை விமர்சித்து வருகின்றனர் பாஜகவினர். தமிழ்நாடு அரசின் முத்திரையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் இடம்பெற்றிருக்கும். ஆளுநர் ரவி அதனையே தவிர்த்திருக்கிறாரே? ஆண்டாள் கோவில் தொடர்பான முந்தைய சர்ச்சைகளில் திரண்டு வந்த பாஜகவினர் இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆண்டாள் கோவில்
இந்நிலையில் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பத்திரிகையாளர் குபேந்திரன்,
"நேற்று : தேசிய கீதம் அவமதிப்பு !
இன்று : ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் கோபுர அவமதிப்பு !
தேசியத்தையும் அவமதித்து, ஆண்டாள் கோபுரத்தையும் புறக்கணிப்பதுதான் கவர்னருக்கு அழகா?
சட்டமன்றத்தில் கவர்னர் வெளியேறும் போது, அமைச்சர் பொன்முடி அவமதித்துவிட்டார் என்று பாஜகவினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
தமிழ்நாடு அரசின் முத்திரையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தையே கவர்னர் தூக்கி எறிந்திருக்கிறாரே? என்ன செய்யப்போகிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications