4 பாயிண்ட்.. ஆளுநர் ரவி மீறிட்டார்.. “நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்”.. சுப.வீ எச்சரிக்கை!
சென்னை : அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவே செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் நாடு முழுவதும் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சுப.வீரபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. ஆளுநரை திரும்பப் பெறக்கோரி குடியரசுத் தலைவரிடம் திமுக கூட்டணி எம்.பிக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது,
இந்நிலையில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் ஆளுநரை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆளுநருக்கு எதிராக போர்க்கொடி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி, திமுக கூட்டணி எம்.பிக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ரவி பிரிவினையை தூண்டும் வகையில் பேசுகிறார். இது அரசாங்கத்துக்கு தர்மசங்கடத்தை உருவாக்குகிறது. தமிழக அரசு, தேசத்தின் மதச்சார்பற்ற கொள்கையில் ஈடுபாடு கொண்டுள்ளது. ஆனால் ஆளுநர் அபாயகரமான, பிரிவினைவாத, மதவாத பிரச்சாரங்களை பொதுவெளியில் முன்னெடுக்கிறார். அவரது பேச்சுக்கள் திட்டமிட்டு வெறுப்பை உள்ளடக்கியுள்ளன என திமுக கூட்டணி கட்சிகள் தங்களது மனுவில் தெரிவித்துள்ளன.

சுப.வீ ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், அரசியல் சாசன சட்டட்த்தை மீறிச் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

எழுதிக் கொடுக்கும் உரையை பேச வேண்டியவர்
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுப.வீரபாண்டியன், "ஆளுநரை திரும்பப் பெற வேண்டிய கோரிக்கை எழுந்திருப்பதே ஆளுநருக்கு அழகு அல்ல, விவாதத்திற்கு அப்பாற்பட்டவராக ஆளுநர் இருக்க வேண்டும். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியில் இருந்து விலகிவிட்டு தனது சொந்த கருத்தை அவர் பேசலாம். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் எழுதிக் கொடுக்கும் உரையைத் தான் ஆளுநர் படிப்பார். அதற்கு ஆளுநர் உரை என்று பெயர், ஆனால் ஆளுநரின் உரையை ஒரு வரியை கூட அதில் சேர்க்க முடியாது, ஆட்சியில் இருப்பவர்கள் எழுதிக் கொடுக்கும் உரையை மட்டும்தான் படிப்பது ஆளுநரின் வேலை.

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
அரசுக்கு எதிராகப் பேச எந்த ஆளுநருக்கும் உரிமையில்லை. நீதிபதியாக இருந்தாலும் ஆளுநராக இருந்தாலும் குடியரசுத் தலைவராகவே இருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் உண்மையானவர்களாக அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்காக விளங்க வேண்டும். எனவே அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவே செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் நாடு முழுவதும் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சுப.வீரபாண்டியன் எச்சரிக்கை விடுத்தார்.

4 பாயிண்ட்
மேலும் பேசிய சுப.வீரபாண்டியன், "நான்கு விஷயங்களின் அடிப்படையில் ஆளுநர் தனக்கான சட்ட உரிமையை மீறி இருக்கிறார்.
1) தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுகிற சட்டமுன் வடிவுகளை உடனுக்குடன் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய ஆளுநர் அனுப்பாமல் காலம் தாழ்த்துகிறார்.
2) வேந்தர் என்கிற முறையில் பல்கலைக்கழகங்களை தான் கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்.
3) தனது சித்தாந்தங்களை வெளியிடுவதற்கு ஆளுநர் பொறுப்பை அவர் பயன்படுத்திக் கொள்கிறார்.
4) சனாதான கூட்டங்களுக்கு இடம் கொடுக்கிற இடமாக ஆளுநர் மாளிகையை அவர் மாற்றி உள்ளார்." எனத் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications