சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ20 லட்சம் தமிழக அரசு நிதி உதவி

Google Oneindia Tamil News

சென்னை: ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Recommended Video

    தீவிரவாதிகள் தாக்குதல்.. நெல்லையை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உட்பட மூவர் வீர மரணம்

    ஜம்மு காஷ்மீரின் ஹிந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகளுடனான மோதல் கர்னல் உள்ளிட்ட 5 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதில் தமிழகத்தின் செங்கோட்டையைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப்.வீரர் சந்திரசேகரும் ஒருவர்.

    TN Govt announces Rs 20 lakhs for CRPF soldier Chandrasekar family

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், சி.ஆர்.பி.எப்- ன் 92-வது படைப்பிரிவில் பணியாற்றியவர் சந்திரசேகர். இவர் செங்கோட்டை அருகே உள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

    நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்னுயிரை தியாகம் செய்த பாதுகாப்புப் படை வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ20 லட்சம் உடனடியாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது ட்விட்டர் பக்கத்தில், ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாராவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் நெல்லையை சேர்ந்த நம் தமிழக வீரர் திரு.சந்திரசேகர் அவர்கள் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். திரு.சந்திரசேகர் அவர்களின் பிரிவால் மீளாத்துயரில் இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Tamilnadu Govt today announced Rs 20 lakhs for CRPF soldier Chandrasekar who lost his life in JK .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X