தடுப்பூசி போட்டால் மட்டுமே பொது இடங்களில் அனுமதி.. தமிழக அரசு அதிரடி.. முழு விவரம்!
சென்னை: தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பொது சுகாதார சட்ட ஆணையில் திருத்தம் செய்து வெளியிடப்பட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக போடப்படுகின்றன.

தடுப்பூசி செலுத்தும் பணி
தடுப்பூசி மீதான பயம் காரணமாக முதலில் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டிய மக்கள் தற்போது மிக ஆர்வமாக போட்டு வருகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு விரைவுபடுத்தியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் அடிக்கடி பேசி கூடுதல் தடுப்பூசிகள் பெற்றுக் கொடுத்தார்.

தடுப்பூசி முகாம்கள்
கொரோனாவை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஒவ்வொரு தடுப்பூசி முகாமிலும் நிர்ணயித்த இலக்கை விட கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை மழை வெள்ள காலத்திலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன.

பொது இடங்களில் அனுமதி
தொடர் தடுப்பூசி முகாம் காரணமாகவும், தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாகவும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. தினசரி பாதிப்பு 800-க்குள் அடங்கி விட்டது இந்த நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நிறுவனங்கள், கடை ஊழியர்கள்
இது தொடர்பாக தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து வெளியிடப்பட்ட ஆணை பின்வருமாறு:- பள்ளி, கல்லூரி, கடைகள், சந்தைகள், தெருக்களில் தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடை ஊழியர்கள், தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுரை விடுத்துள்ளது.

அதிகாரிகள் உறுதி
மக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியது குறித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.திரையரங்குகள், இதர பொழுது போக்கு இடங்கள், விளையாட்டு மைதானங்களில் தடுப்பூசி உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications