அரசு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல், கல்வியியல், என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு 24-ந்தேதி (இன்று) முதல் ஜனவரி 5-ந்தேதி வரை இணையவழி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழக அரசின் உயர்கல்வித் துறையில் 180-க்கும் மேற்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் சுமார் 70 சதவீதம் அளவிற்கு ஆசிரியர்களின் பற்றாக்குறை இருந்து வருகிறது. அதாவது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தமாக சுமார் 10,079 அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. இதில் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த சூழலில் கடந்த அக்டோபரில் வெளியான அறிவிப்பின்படி, 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 2025 வரை பெறப்பட்டிருந்தது. இதுதவிர
சுமார் 881 புதிய கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் 2025-26 கல்வியாண்டிற்காக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு மாத ஊதியமாக ₹25,000 வழங்கப்படுகிறது.ஆசிரியர்கள் பணியிடங்களை போலவே அரசு கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அலுவலக உதவியாளர்கள், கணக்காளர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களிலும் கணிசமான காலிப்பணியிடங்கள் உள்ளன.
இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல், என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி 2025-26-ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல், கல்வியியல், என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு 24-ந்தேதி (இன்று) முதல் ஜனவரி 5-ந்தேதி வரை இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.dcetransfer.in மற்றும் www.nonteaching.dcetransfer.in என்ற இணையதள முகவரியிலும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.tndotetransfer.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications