அதிரடி மாற்றங்கள்... அண்ணா பல்கலைக்கழகம் 2-ஆக பிரிப்பு... சட்டசபையில் சட்ட முன்வடிவு தாக்கல்..!
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக 2-ஆக பிரிக்கும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இந்த முக்கிய மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார்.
இதேபோல் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்ட முன்வடிவு மசோதா உள்ளிட்ட 18 சட்ட முன்வடிவுகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிறைவு நாள்
கொரோனா பரபரப்பு மத்தியில் நேற்று முன் தினம் தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. மூன்றாவது நாளான இன்று துணை நிதி நிலை அறிக்கை தாக்கல், சட்ட முன்வடிவு தாக்கல், கேள்வி-பதில், நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்தவகையில் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிப்பு, ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை உள்ளிட்ட 18 சட்டமுன்வடிவு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நிர்வாக வசதிக்காக
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் சட்டமசோதாவை தாக்கல் செய்துள்ளார் அமைச்சர் கே.பி.அன்பழகன். மாநிலம் முழுவதும் உள்ள இணைப்புக் கல்லூரிகளை நிர்வாகம் செய்ய வசதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சட்ட மசோதாக்கள்
மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிகள் திருத்தச் சட்டம் மற்றும் நகராட்சி, மாநகராட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு, வேதா நிலையத்தை நினைவிடம் ஆக்குவதற்கான சட்ட மசோதா, திருமண பதிவு செய்தல் சட்டத்திருத்த மசோதா, என 18 சட்ட முன்வடிவுகள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஓ.பி.எஸ். தாக்கல்
இதனிடையே துணை நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம். கடந்த 6 மாதங்களாக பேரவையின் ஒப்புதல் பெறாமல் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் பற்றி குறிப்பிட்டு அது அவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications