ஓசூர், திருப்பூர் உட்பட 10 நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள்! ரூ.115 கோடி நிதி.. வெளியானது அரசாணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ள்ளது. தமிழகத்தில் ரூ 424 கோடி மதிப்பில் 13 இடங்களில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

TN govt order for construction of 10 new bus stations in Tamil Nadu Fund allocation of Rs.115 crore

ஈரோடு,கடலூர் ,கரூர் ,காஞ்சிபுரம் ,திருத்தணி ,திருமங்கலம் ,ராணிபேட்டை , திண்டிவனம் , திருவண்ணாமலை, மன்னார்குடி,மயிலாடுதுறை ,சங்கரன்கோவில் ,நாமக்கல் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்பட உள்ளன தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் இந்த புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படுகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திருப்பூர் மற்றும் ஓசூர் மாநகராட்சிகளில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படவுள்ளது. கூடலூர் (டி), அரியலூர், வடலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல் மற்றும் பொள்ளாச்சி பேரூராட்சிகளுக்கு இதற்கான நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2022-2023 பட்ஜெட் கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்ட சில மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார். இந்த அறிவிப்பின் அடிப்படையில், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் அரசுக்கு கருத்துரு அனுப்பபட்டது . 9வது மாநில உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக் குழு, புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கான மதிப்பிடப்பட்ட செலவில் 50% உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியிலிருந்து மானியமாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கு தேவையான நிலுவைத்தொகைக்கு பல்வேறு திட்டங்களில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு நிதி கட்டப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். பேருந்து நிலையங்கள் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளதால், ஸ்வச் பாரத் மிஷன் 2.0ன் கீழ் நிதியைப் பயன்படுத்தி பொதுக் கழிப்பறைப் பகுதிக்கு நிதியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ரூ. 26 கோடி மற்றும் ஓசூரில் ரூ. 30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி உள்ளிட்ட 8 நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+