ஏர் ஆம்புலன்ஸ் ஆக மாறிய ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்... டெண்டர் விட்ட தமிழக அரசு!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு விழாக்களுக்கு செல்ல பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டர் ஏர் ஆம்புலன்ஸ் ஆக மாற்றப்பட்டுள்ள நிலையில் அதனை பராமரிக்க டெண்டர் விட்டிருக்கிறது தமிழக அரசு.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு பிரசாரம், அரசு விழாக்களில் பங்கேற்கும் பயணங்களுக்காக பெல் 412 EP ஹெலிகாப்டரை வாங்கினார். இது 2 எஞ்சின்களை கொண்டது. இதில் 11 பேர் பயணம் செய்யலாம்.

ஜெயலலிதா ஹெலிகாப்டர்
2016 சட்டசபை தேர்தலின் போது இந்த ஹெலிகாப்டரில் சென்றுதான் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. இதற்காக அப்போது தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதியும் பெறப்பட்டது. ஹெலிகாப்டருக்கே ஜெயலலிதா என பெயர் வைத்தாலும் வைப்பார்கள் எனவும் தேர்தல் களத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பயணங்களை விமர்சித்தும் பேசியிருந்தார்.

முதல் டெண்டர்
இந்த ஹெலிகாப்டர் வாங்கப்பட்டது முதல் மிகக் குறைந்த நாட்கள்தான் பயன்படுத்தப்பட்டது. நீண்ட காலமாக இதனை பயன்படுத்தவில்லை. கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசியாக பயன்படுத்தப்பட்டது இந்த ஹெலிகாப்டர். இந்த நிலையில் ஹெலிகாப்டர் பழுதடைந்தது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஹெலிகாப்டரை ஏலத்திற்கு விட முடிவெடுத்தது தமிழக அரசு. அதற்கான பொறுப்பு மாநில வாணிப கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏலம் போகவில்லை
ஹெலிகாப்டர் ஏலத்திற்கான அடிப்படை விலை ரூ.35 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டது. ஆனால் அப்போது ஹெலிகாப்டரை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. லோக்சபா தேர்தல் காலத்திலாவது ஹெலிகாப்டர் ஏலத்துக்கு போகும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போதும் ஏலம் போகவில்லை.

மீண்டும் டெண்டர்
இதனால் சென்னை விமான நிலையத்திலேயே இந்த ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் இந்த ஹெலிகாப்டரை ஏர் ஆம்புலன்ஸாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாகவும் அண்மையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த ஹெலிகாப்டரை பராமரிக்க மீண்டும் டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு. டெண்டர் விண்ணப்பங்களை வழங்க ஜனவரி 6-ந் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் நாளேடுகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications