முதியவர்கள் ரேசன் கடைக்கு செல்லாமலேயே.. அத்தியாவசிய பொருட்களை வாங்குவது எப்படி? முக்கிய அறிவிப்பு
சென்னை: முதியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் ரேசன் கடைகளுக்கு தங்களுக்கு வேண்டியவர்களை அனுப்பிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பமும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரேசன் அட்டையிலுள்ள குடும்பத் தலைவர் அல்லது உறுப்பினரின் கைரேகை பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் முறைகேடுகளைத் தடுக்க முடிவதால் பெரியளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இருப்பினும், அவ்வப்போது ரேசன் கடைகளில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும், முதியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் ரேசன் கடைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. அவர்கள் ரேசன் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு இருந்தனர்.
ரேசன் கடைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளவர்கள் ரேசன் கடைகளுக்கு தங்களுக்கு வேண்டியவர்களை அனுப்பிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதற்கான விண்ணப்பத்தை ரேசன் அட்டைதாரர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளில் வழங்க வேண்டும். அதைச் சரிபார்த்த பிறகு அந்த நபரிடம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். இந்த விண்ணப்பங்கள் தாமதமின்றி சரிபார்த்து, விரைவாக ஒப்புதல் தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அங்கீகார படிவத்தை உணவு வழங்கல் துறையின் https://www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications