பொதுக்கூட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்வதை உறுதிப்படுத்துங்க.. போலீசாருக்கு பறந்த ஆர்டர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் இடையூறின்றி செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என காவல் ஆணையர்கள், கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட போது 108 ஆம்புலன்ஸ் சென்றது. நோயாளி இல்லாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் வெறும் வாகனத்தை வேண்டுமென்றே ஓட்டிக்கொண்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

TN Govt Tells High Court DGP Issues Circular to Ensure Free Passage for Ambulances During Protests

எடப்பாடி கூட்டத்தில் ஆம்புலன்ஸ்

இனி நான் பிரச்சாரம் செய்யும்போது ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸை ஓட்டி வருபவர் அதே ஆம்புலன்ஸில் நோயாளியாக போவார் என மிரட்டல் விடுத்தார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை சூழ்ந்து கொண்டு தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் துறையூரில் எடப்பாடி பழனிசாமி பரப்புரையின்போது வந்த ஆம்புலன்ஸை அதிமுகவினர் தாக்கினர். இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளரான கர்ப்பிணி பெண் ஆகியோர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த 10 பேர் மீது துறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்தச் சம்பவத்திற்குப், பிறகு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்தச் சூழலில், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு

மதுரையைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இருளாண்டி, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "நான் கடந்த 16 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18.08.2025 வேலூர் மாவட்டத்தில்'மக்களை காப்போம்' பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இரவு 9.45 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தர், அடுக்கம்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சந்திரா என்ற பெண்ணை அழைத்துக்கொண்டு கூட்டம் நடைபெற்ற இடத்தை கடந்தார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி, ஆம்புலன்ஸை பார்த்து, இனிமேல் நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதே வாகனத்தில் நோயாளியாகச் செல்வார் என பகிரங்மாக மிரட்டினார். இந்த மிரட்டல் தொடர்பாக போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 108 ஊழியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஐகோர்ட் கிளை விசாரணை

எனவே 108 ஆம்புலன்ஸ் மற்றும் அதன் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். குறைந்தபட்சம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரையாவது தமிழ்நாடு முழுவதும் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரி இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

நீதிபதிகள் கண்டனம்

அரசு தரப்பில், திருச்சியில் ஆம்புலன்ஸ் வேன் ஓட்டுநர் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நீதிபதிகள், "ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்கப்படுவது ஏற்கத்தக்கது அல்ல. ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், வழக்குப்பதிவு செய்ய வேண்டும். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், சமூக அமைப்பாக இருந்தாலும் ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும்.

பொதுக் கூட்டங்களில் மக்கள் அதிகமாக இருந்தாலும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட வேண்டும். அனைத்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமா? ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் வழிமறித்து தாக்கினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனத் தெரிவித்தனர். மேலும், ஆம்புலன்ஸ் பணியாளர் தாக்கப்பட்டது தொடர்பாக எடுத்த நடவடிக்கை பற்றி தமிழக காவல்துறை டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.

டிஜிபி வழிகாட்டுதல் அறிக்கை தாக்கல்

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், டிஜிபியின் வழிகாட்டுதல்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "அதிக போக்குவரத்து மிகுந்த பிரதான சாலைகளில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. தவிர்க்க முடியாத பட்சத்தில், அனுமதிக்கும்போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சாலை ஓரங்களில் அல்லது பொது சந்திப்புகளுக்கு அருகில் கூட்டம் நடத்தும்போது போதிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பொதுமக்களின் சிரமத்தைத் தவிர்க்கவும் போதுமான காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு, மீட்பு வாகனங்கள் மற்றும் காவல் மீட்பு வாகனங்கள் உட்பட அனைத்து அவசர கால வாகனங்களும் தடையின்றிச் செல்ல முடியும் என்பதை முன்கூட்டியே உறுதிப்படுத்த வேண்டும். அவசர கால வாகனங்கள் செல்வதற்கான பாதையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

போலீசாருக்கு உத்தரவு

பெரிய அளவில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெறுகிறது என்றால் அருகில் இருக்கக் கூடிய மருத்துவமனைகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், இந்த வழிகாட்டுதலை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என காவல்துறையினக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் விசாரணையை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+