தமிழக அரசின் சுகாதாரதுறையின் கீழ் வந்தது சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் சுகாதார துறையின் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் இம்மருத்துவ கல்லூரி இனி கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி என அழைக்கப்படும்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, தமிழக அரசின் உயர்கல்விதுறையின் கீழ் இயங்கி வந்தது. ஆனால் அரசு கல்லூரியை விட அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களை நடத்தினர்.

TN Health department takes over Chidambaram Raja Muthiah Medical College

இதனையடுத்து இந்த கல்லூரி தற்போது சுகாதார துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி என்ற பெயரில் இனி இக்கல்லூரி அழைக்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணமே இனி இந்த கல்லூரியில் பெறப்படும் எனவும் தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+