தமிழ்நாட்டில் முக்கிய காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்.. சென்னை கமிஷ்னராக ஷங்கர் ஜிவால் நியமனம்!
சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய காவல்துறை அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்ப்பட்டுள்ளனர். சென்னை நகர காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலுக்கு பதிலாக ஷங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற நேற்று தமிழகத்தின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஏஸ் நியமனம் செய்யப்பட்டார். இதேபோல் தமிழக முதல்வரின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தொல்லியல்துறை ஆணையராக இருக்கும் உதயச்சந்திரன் முதல்வரின் முதலாவது முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதேபோல் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருக்கும் உமாநாத், முதல்வரின் இரண்டாவது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் மூன்றாவது செயலாளராக எம்.எஸ். சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அருங்காட்சியங்கள் துறையின் ஆணையராகப் பணியாற்றி வருகிறார். புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் முதல்வரின் நான்காவது செயலாளர் என்ற பதவியில் அனு ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தொழில்துறை ஆணையராகப் பணியாற்றி வருகிறார்கள்.
புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் முதல்வரின் நான்காவது செயலாளர் என்ற பதவியில் அனு ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தொழில்துறை ஆணையராகப் பணியாற்றி வருகிறார்கள்.
ஐஏஏஸ் அதிகாரிகள் மட்டுமின்றி முக்கியமான ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறை உளவுத் துறை ஏடிஜிபியாக கோவை மாநகர கமிஷ்னர் எஸ். டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை நகர காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலுக்கு பதிலாக ஷங்கர் ஜிவால் நியமனம். இவர் இதுவரை சென்னை ஆயுதப்படை பிரிவின் ஏடிஜிபியாக இருந்தார். ஜெயந்த் முரளிக்கு பதிலாக தமிழக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக பி. தாமரைகண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்,
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications