பிரபாகரன் 66வது பிறந்த நாள்... கேக் வெட்டி கொண்டாடிய வேல்முருகன், திருமாவளவன், சீமான்
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66-வது பிறந்த நாளை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 66-வது பிறந்த நாள் இன்று. உலகம் முழுவதும் பிரபாகரனின் பிறந்த நாள் இன்று தமிழர்களால் கொண்டாடப்பட்டது.

தமிழகத்திலும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் பிரபாகரனின் பிறந்த நாளை நிவர் புயலுக்கு நடுவே கொண்டாடின. தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் த.வா.க. தலைவர் வேல்முருகன் கட்சியினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டினார். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பிரபாகரன் பிறந்த நாள் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பிரமாண்ட கேக் வெட்டப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டு பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களிலும் #HBDமேதகுPRABHAKARAN #HBDதேசியத்தலைவர்66 ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்காகின.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications