தமிழக மாணவர் மர்ம மரணம்.. நீதி கிடைப்பதை உறுதி செய்க.. ஜார்கண்ட் முதல்வருக்கு மு.க ஸ்டாலின் கடிதம்
சென்னை: ஜார்க்கண்டில் மருத்துவ மாணவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஜார்க்கண்ட் முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் புகழ் பெற்ற ஆர்ஐஎம்எஸ் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் விடுதியில் தங்கி, தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மதன் குமார் தடயவியல் மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியின் விடுதியில், ஹாஸ்டல் எண் 5ல் உள்ள அறை எண் 69ல் டாக்டர் மதன்குமார் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் அவரது உடல் எரிந்த நிலையில் சடலமாக இருப்பதாக ராஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் மதன்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேநேரம் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மருத்துவர் மதன் குமார் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
யாரோனும் கொன்று எரித்து வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் டாக்டர் மதன்குமார் கொல்லப்பட்டது உறுதியானது. டாக்டர் மதன் குமார் முதலில் விடுதியின் மேல் மாடியில் கொல்லப்பட்டிருக்கிறார், பின்னர் அவரது உடலை எரிக்க முயற்சித்தவர்கள், விடுதியின் பின்புறமுள்ள முட்புதரில் அவரது உடலை வீசிவிட்டு தீ வைத்து கொளுத்தி உள்ளார்கள்.
விடுதியின் மேற்கூரையில் மொபைல் மற்றும் கால்தடங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடய அறிவியல் சோதனைக்கு போலீசார் அதனை அனுப்பி உள்ளனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, மருத்துவ மாணவர் மதன்குமார் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ள கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், மருத்துவ மாணவர் மதன்குமார் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிதி உதவியையும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் யாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்த திரு. மதியழகள் என்பவாது மகன் திரு. ம.மதன்குமார் (வயது 28) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள இராஜேந்திரா மருத்துவக் கல்லூரியின் (Rajendra Institute of Medical. Sciences) விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு தடயவியல் மருத்துவம் படித்து வந்த நிலையில், திரு. ம.மதன்குமார் காணாமல் போய் பிள்ளர் அவரது உடல் எரிந்த நிலையில் சடலமாக அவர் தங்கியிருந்த விடுதியின் பின்புறத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என்ற துவரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த மனவேதனையடைந்தேன்.
உடனடியாக தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் ஜார்க்கண்ட மாநில அரசுடன் தொடர்பு கொண்டு திரு. ம. மதன்குமாரின் உடலை அவாது சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொண்டதன் அடிப்படையில், அவரது உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு மாண்புமிகு வளத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரால் அஞ்சலி செலுத்தப்பட்டு, இன்று காலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், திரு. ம.மதன்குமார் மர்மான முறையில் இறந்த சம்பவம் குறித்து ஜார்க்கண்ட் மாநில காவல் துறையினரும் வழக்குப் பதிவு செய்து (விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துயரமான சூழ்நிலையில், திரு. ம.மதன்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். மேலும், திரு. ம.மதன்குமார் அவர்கள் இறந்தது குறித்து உரிய விசாரணையை விரைந்து மேற்கொண்டு, அவரது இறப்பிற்கு நீதி கிடைக்கும் வகையில் துரித நடவடிக்கை மேற்கொன்னவும் நான் கடிதம் மூலம் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் திரு. ஹேமந்த் சோரன் அவர்களை வலியுறுத்தியுள்ளேன்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications