'இல்லம் தேடி கல்வி திட்டம்'.. பெற்றோர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். தமிழகத்தில் 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இல்லம் தேடி கல்வி திட்டம்

இல்லம் தேடி கல்வி திட்டம்

இத்திட்டத்தின்படி பள்ளி முடிந்து மாலை நேரங்களில் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மையங்களுக்கு அனுப்ப வேண்டும்; 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற விதத்தில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

தன்னார்வலர்கள்

தன்னார்வலர்கள்

அந்த ஆறு மாத காலத்திற்கு இந்த திட்டம் செயல்படும் என்றும் மொத்தம் 17 லட்சம் தன்னார்வலர்கள் வரை இந்த திட்டத்திற்கு தேவைப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை கற்பிக்க தன்னார்வலர்கள் 12 ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு ஊக்கத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

 அமைச்சர் குட் நியூஸ்

அமைச்சர் குட் நியூஸ்

இந்த நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இல்லம் தேடி கல்வித் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. திருச்சி, திண்டுக்கல், மதுரை, தஞ்சை, கிருஷ்ணகிரி, ஈரோடு ,நாகை, கடலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தொடக்கத்தில் சர்ச்சை

தொடக்கத்தில் சர்ச்சை

இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வந்தபோது தொடக்கத்தில் இதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமாகத்தான் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் பலரும் குற்றம்சாட்டினார்கள். ''தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் முறை, அவர்களுடைய பங்களிப்பு, அவர்களால் கற்பிக்கப்படும் மாணவ மாணவியரின் கற்றல் மேம்பாடு ஆகியவை தொடர்ந்து கல்வியாளர்கள் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும். அரசின் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே தன்னார்வலர்களாகத் தொடர அனுமதிக்கப்படுவர். இதில் எந்த குழப்பமும் இல்லை' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போது விளக்கம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+