'செயல்படாத அம்மா மினி கிளினிக்களின்.. பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை..' அமைச்சர் மா.சு பதிலடி
சென்னை: தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் தற்போது இல்லை என்றும் செயல்படாத கிளினிக்கின் பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் கடந்தாண்டு அம்மா மினி கிளினிக் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
அதன்படி முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் சுமார் 2000 மினி கிளினிக்கள் ஆரம்பிக்கப்பட்டது. இதற்குப் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

ஓபிஎஸ் சாடல்
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் மாவட்டம் நவப்பட்டி ஊராட்சி பொதுச் சேவை மையத்தில் உள்ள "அம்மா மினி கிளினிக்" என்ற பெயர் பலகை முதலமைச்சரின் மினி கிளினிக் என்று பெயர் மாற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதற்கு அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நவப்பட்டி "அம்மா மினி கிளினிக்" என்ற பெயர்ப் பலகை முதலமைச்சரின் மினி கிளினிக் என்று மாற்றப்பட்டதற்கு யார் காரணம் என்றும் இந்த பெயர்ப் பலகை மாற்றத்திற்கான நிதி யாரால் கொடுக்கப்பட்டது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியிருந்தார்.

பெரியளவிலான திட்டம்
இதனிடையே இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சேலம் நவல்பட்டு பகுதியில் உள்ள அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது.

அவசியம் இல்லை
இதற்கு 1842 மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என யாரும் நியமிக்கப்படவில்லை. மேலும், பெயரளவில் தொடங்கப்பட்ட அம்மா கிளினிக் தற்போது செயல்பாட்டில் இல்லை. அப்படிச் செயல்படாத கிளினிக்கின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதே சமயம் வீடு தேடி மருத்துவம் என்ற திட்டம் தற்போது சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மிரண்டு போன எதிர்க்கட்சி
அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்குப் பயன் தரும் வகையிலான திட்டங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. அம்மா உணவகத்தில் உள்ள பணியாளர்களை வேலையை விட்டு எடுப்பதாகக் கூறும் தகவல் உண்மை இல்லை. இந்த ஆட்சியின் சாதனைகளை எதிர்க்கட்சியினர் பார்த்து மிரண்டு விட்டார்கள். அதனால் தான் இப்படி ஆதாரமில்லாத புகார்களைக் கூறி வருகின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications