சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மருதமலை முருகரை இழிவுபடுத்துவதா? அமைச்சர் வேலுமணி கண்டனம்- பெரியார் சிலை அவமதிப்புக்கும் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்க் கடவுள் முருகனை அவமதிக்கும் செயல்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Periyar சிலைக்கு காவிப்பூச்சு : கொந்தளித்த தலைவர்கள்

    கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் ஒன்றில் இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்தும், புராணங்களை கேலி செய்தும் தொடர்ந்து வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பது புகார். இதன் தொடர்ச்சியாக கந்த சஷ்டி கவசம் குறித்தும் ஆபாசமாக சித்தரித்து வீடியோ ஒன்று அந்த யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது தொட்ர்பாக போலீசில் புகார் தரப்பட்டது.

    TN Minister SP Velumani condemns Karuppar Koottam Channel

    இந்த வீடியோ குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன. இதனையடுத்து சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து, செந்தில்வாசன் என்பவரை வேளச்சேரியில் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சுரேந்திரன் என்பவரை, தமிழக காவல்துறையினர் சென்னைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தங்க மாஸ்க் அணிந்து இருக்கும் தங்க மகன்...கை கழுத்தில் எல்லாம் தங்கம்தான்...!!தங்க மாஸ்க் அணிந்து இருக்கும் தங்க மகன்...கை கழுத்தில் எல்லாம் தங்கம்தான்...!!

    இந்நிலையில் முருகப்பெருமானை அவமதித்த செயலுக்கு தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

    TN Minister SP Velumani condemns Karuppar Koottam Channel

    தமிழர்களின் கடவுளான மருதமலை வேலவன் முருகரை இழிவுபடுத்தி, நம்பிக்கையோடு வழிபடுவோரின் மனதை புண்படுத்தியிருப்பது வருத்தமளிக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார். அனைவரது உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மரியாதை அளிப்பதே மதச்சார்பின்மை. இதை நிலைகுலைக்க செய்வோர் யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கவர்" என்று பதிவிட்டு தன்னுடைய கண்டனத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

    பெரியார் சிலை அவமதிப்புக்கும் கண்டனம்

    இதேபோல் கோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

    TN Minister SP Velumani condemns Karuppar Koottam Channel

    கோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வேலுமணி கூறியுள்ளார்.

    English summary
    TN Minister SP Velumani condemns Karuppar Koottam Channel for Kandha Sasti Row.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X