சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனடா செல்லும் சபாநாயகர் அப்பாவு! வாழ்த்தி வழியனுப்பி வைத்த முதல்வர் ஸ்டாலின்! பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு வார காலம் அரசு முறை பயணமாக கனடா நாட்டுக்கு செல்கிறார் சபாநாயகர் அப்பாவு.

Recommended Video

    ADMK-வின் விவகாரம் மக்கள் பிரசனை கிடையாது- Appavu

    இதையொட்டி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

    முதல்வர் ஸ்டாலினும் சபாநாயகர் அப்பாவுவின் கனடா பயணம் வெற்றிபெற வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

    பெட்ரோல் டீசலுக்கு குட்பை! கார் வாங்குவோருக்கு மாஸ்ஸான செய்தி! இனி மேல் அந்த பிரச்சினை இல்லைபெட்ரோல் டீசலுக்கு குட்பை! கார் வாங்குவோருக்கு மாஸ்ஸான செய்தி! இனி மேல் அந்த பிரச்சினை இல்லை

     காமன்வெல்த்

    காமன்வெல்த்

    கனடா நாட்டின் ஹாலிபேக்ஸ் நகரில் 65வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்தும் சபாநாயகர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் தமிழக பிரதிநிதியாக தனக்கு வந்த அழைப்பை ஏற்று கனடா செல்கிறார் சபாநாயகர் அப்பாவு. ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

     சிம்லா மாநாடு

    சிம்லா மாநாடு

    6 மாதங்களுக்கு முன்பு ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற தேசியளவிலான சபாநாயகர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு வேண்டும் எனக் கூறி கவனம் ஈர்த்தார். இந்நிலைய இந்த முறையும் அது போல் முக்கிய சப்ஜெக்ட் பற்றி பேசி தமிழகத்தை உலகம் தழுவிய அளவில் கவனம் ஈர்க்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பேசவிருக்கும் விவகாரம் பற்றியும் முதல்வரிடம் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    முதல்முறை

    முதல்முறை

    தமிழக சட்டசபை சபாநாயகராக பொறுப்பெற்ற பிறகு அப்பாவு மேற்கொள்ள உள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இன்றிரவு சென்னையிலிருந்து கனடா புறப்படும் அப்பாவு, காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்தவாறு பங்கேற்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடா பயணத்துக்காக பிரத்யேகமாக கோட் சூட் என எதையும் அவர் வாங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அங்கு கடும் குளிர் இருக்கும் பட்சத்தில் அதில் மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    முதல்வரிடம் வாழ்த்து

    முதல்வரிடம் வாழ்த்து

    கனடாவில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு பற்றி ஏற்கனவே முறைப்படி முதல்வர் ஸ்டாலினிடம் சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தாலும் இன்றிரவு புறப்பட உள்ளதால் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதனிடையே சட்டசபை செயலகத்தில் தாம் பார்க்க வேண்டிய கோப்புகள் அனைத்தையும் தேக்கம் அடைய வைக்காமல் கடந்த 2 நாட்களாக அவர் பார்த்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Speaker Appavu Official Trip to Canada
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X