மிரட்டுறீங்களா? அப்பாவு வீசிய வெடி.. உளவுத்துறை வரை போயிருச்சாமே விஷயம்.. டெல்லியே கிளம்பி வருது போல
சென்னை: "என்னையும், 3 மாதங்களாக மிரட்டினார்கள்" என்று அமலாக்கத்துறை குறித்து சபாநாயகர் அப்பாவு பரபரப்பு கிளப்பவும், அதுகுறித்த விவகாரம் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
அரசு மருத்துவரிடமிருந்து ரூ.20 லட்சம் பெற்றது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட சம்பவமானது, தேசிய அளவில் பரபரப்பை தந்துவிட்டது.

இதனிடையே, அமலாக்கத்துறையிடம் இருந்து தனக்கு 3 மாதங்களாக மிரட்டல் வந்தது என்று சபாநாயகர் அப்பாவு சொல்லவும், அதற்கு மேல் பரபரப்பு கூடியது.
நடவடிக்கை: அப்பாவு சொல்லும்போது, "பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் தொழிலதிபர்களுக்கு குறித்து நூல் விடுவார்கள். அதாவது உங்கள் மேல் பிரச்சனை இருக்கிறது.. உங்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறார்கள். எனக்கு வேண்டிய ஆள் என்பதால் அவர்களை சமாதானப்படுத்தி வைத்துள்ளேன் என்றெல்லாம் சொல்வார்கள்..
முதலில் அன்பாக பேசுவார்கள்.. பிறகு, மிரட்டுவார்கள். பிறகு மீண்டும் சமாதானமாக பேசி பேரம் பேசுவார்கள். சமாதானத்திற்கு உடன்படியவில்லையென்றால் உடனே நோட்டீஸ் அனுப்புவார்கள்..
விசாரணை: என்னிடம் கூட சிலர் 3 மாதங்களாக பேசிக்கொண்டே வந்தனர். ஆனால் நான் காது கொடுத்து கேட்டதில்லை. விவசாயம் செய்து முன்னுக்கு வந்த என்னையே மிரட்டுறீங்களா என கேட்டேன்? என்னை ஊரை விட்டு போக சொன்னார்கள். என்னை போன்றே பலருக்கும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் இடைத்தரகர்கள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது" என்றெல்லாம் சொல்லி அதிர வைத்தார் அப்பாவு.
ஒரு மாநில சட்டமன்றத்தின் தலைவராக இருப்பவர், மத்திய அரசின் முக்கிய விசாரணை அமைப்பின் மீது கடுமையான குற்றச்சாட்டை பகிரங்கமாக சுமத்தியிருப்பதை மத்திய பாஜக அரசு, மிக எளிதாக கடந்து செல்லவில்லையாம்.. மாறாக, மிக மிக சீரியசாக இந்த குற்றச்சாட்டை கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறதாம்.
முக்கிய விசாரணை: அந்த வகையில், அப்பாவுவின் குற்றச்சாட்டு தொடர்பாக தீவிரமாக விசாரிக்குமாறு மத்திய உளவுத்துறையினருக்கு டெல்லியிலிருந்து உத்தரவும் வந்துள்ளதாம். இப்போது அவரை யார் மிரட்டியிருக்ககூடும் என்கிற விசாரணையை தமிழக அமலாக்கத்துறை தரப்பில் உளவுத்துறை விசாரிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து, அப்பாவுவிடமும் விசாரிக்கவிருக்கிறார்களாம்.

அதாவது, அமலாக்கத்துறையினர் மிரட்டினார்கள் என்று சொல்கிறீர்கள் அல்லவா ? நேரில் மிரட்டினார்களா? தொலைபேசியில் மிராட்டினார்களா? நேரில் என்றால், எங்கெங்கு வந்து உங்களை சந்தித்தார்கள் ? தொலைப்பேசி வாயிலாக எனில் எந்த எண்ணில் இருந்து மிரட்டினார்கள் ? அந்த எண்களை கொடுக்க முடியுமா? என்றெல்லாம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது மத்திய உளவுத்துறை.
தொலைபேசி: இந்த விசாரணையில், அப்பாவுவை மிரட்டியவர்கள் அமலாக்கத்துறையினரா அல்லது போலி நபர்களா ? என்கிற விபரங்களெல்லாம் தெரிந்து விடும் என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications