நாளைக்கு வேலைக்கு போக போறீங்களா?.. பேசாம பொண்டாட்டி பேச்ச கேட்டு வீட்ல இருங்கள்.. வெதர்மேன் அட்வைஸ்
சென்னை: வேலைக்கு செல்பவர்கள் நாளை மனைவி பேச்சை கேட்டுகிட்டு வீட்ல கூட இருக்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவை அடுத்தடுத்து வந்ததால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
பொதுவாக மழை குறித்த அப்டேட்டுகளை சென்னை வானிலை மையம், இந்திய வானிலை மையம் ஆகியவை வந்தாலும் தனியார் ஆய்வாளர்களும் சில மாடல்களை கணித்து வருகிறார்கள்.

தமிழ்நாடு வெதர்மேன்
அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். இவர் கணித்தால் சரியாக இருக்கிறது என்பதால் இவருக்கு லட்சக்கணக்கான பாலோயர்ஸ் உள்ளனர். பொதுவாக இவர் வானிலை அறிக்கைகளை துல்லியமாகவும் யாரையும் அச்சுறுத்தாமலும் வழங்கி வருகிறார்.

வடகிழக்கு பருவமழை
தென் மேற்கு பருவமழை காலமாக இருந்தாலும் சரி வடகிழக்கு பருவமழை காலமாக இருந்தாலும் சரி இவரது அறிக்கைகள் எப்போது வரும் என நெட்டிசன்கள் காத்திருப்பர். அதே வேளையில் அதிகாரப்பூர்வமாக வானிலை மையங்கள் கூறுவகையும் பின்பற்றுமாறு தெரிவித்துவிடுவார்.

சம்பவம்
இன்று அவர் சென்னை மழையை குறித்து ஒரு முக்கிய பதிவை போட்டுள்ளார். அதாவது இன்று மாலை முதல் நாளை மாலை அல்லது இரவு வரை மிக அதிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் 7, 11 ஆகிய நாட்களுக்கு பிறகு நவம்பர் 18ஆம் தேதி நடப்பது மிகவும் தரமான சம்பவமாக இருக்கும் என அவர் சொல்லாமல் சொல்லியுள்ளார்.

வெதர்மேன் அட்வைஸ்
மேலும் அலுவலகம் செல்வோருக்கும் வெதர்மேன் ஒரு அறிவுறுத்தலை விடுத்துள்ளார். அதாவது இந்த முறை மழை பகல் வேளையில் தொடர்ந்து கனமழை பெய்யும். அது போல் அலுவலகத்திற்கு வரும் நேரத்திற்கு பிறகும் கனமழை தொடரும். எனவே தாழ்வான இடங்களில் உள்ளவர்கள், வெள்ளநீர் சூழும் இடங்களில் உள்ளவர்கள் நாளை ஒரு நாள் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற முடியுமா என பாருங்கள்.
Recommended Video

பொண்டாட்டி பேச்ச கேளுங்க
அதாவது பொண்டாட்டி பேச்ச கேட்டு வீட்ல இருந்தா கூட ஓகேதான். இந்த சம்பவங்கள் இந்த சீசனில் மூன்றோடு முடிந்து விடாது. இது தொடரும். இந்த பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மட்டுமே. எனவே அரசு அறிவிப்புகள், வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை பின்பற்றுங்கள். வாட்ஸ் ஆப்பில் வரும் ஆதாரப்பூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார் பிரதீப் ஜான்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications