ஊருக்கு தான் உபதேசம் செய்வார் அண்ணாமலை! அவதூறு அரசியலில் அவர் தோல்வியை தழுவுவார்! காங்கிரஸ் சாடல்!
சென்னை: அவதூறுகளைப் பரப்புகிற நோக்கத்தில் அண்ணாமலை அரசியல் செய்வதாகவும் அவர் தோல்வியைத் தான் தழுவுவார் எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
மேலும், ஊருக்கு உபதேசம் செய்யும் அண்ணாமலை முதலில் தனது கட்சி குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் இருக்கும் வகையில் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அண்ணாமலை போராட்டம்
மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தை வஞ்சிக்கிற அதேநேரத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அரசியல் ஆதாயம் தேடுகிற நோக்கத்தில் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு வருகிறார். விருதுநகர் இளம் பெண் கூட்டுப் பலாத்கார வழக்கில் தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என்று கூறி விருதுநகரிலும், சென்னையிலும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தியிருக்கிறார்.

தோல்வியை தழுவுவார்
எந்த பிரச்சினையைக் கையில் எடுத்தாலும் எடுபடாத நிலையில் அவதூறுகளைப் பரப்புகிற நோக்கத்தில் விருதுநகர் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கிறார். அதிலும் அவர் தோல்வியைத் தான் தழுவுவார். விருதுநகரில் 22 வயது பெண் சம்மந்தப்பட்ட பலாத்கார வழக்கில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார். மேலும் தவறு செய்வோருக்கு பாடமாக இருக்கும் வகையில் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சட்டப்பேரவையில் உறுதி கூறியிருக்கிறார்.

60 நாட்களில்
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். விசாரணையை தமிழக டி.ஜி.பி. நேரடியாகக் கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். 60 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டுமென்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இதன்மூலம் விசாரணை நியாயமாகவும், துரிதமாகவும் நடைபெறும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

பாலியல் பலாத்காரம்
எனவே, தமிழக பா.ஜ.க.வை பொறுத்தவரை விருதுநகர் பாலியல் பலாத்காரம் குறித்து போராட்டம் நடத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை. பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடக்கிற பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விசாகா குழு அமைக்கப்படும் என்று தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி ஜூன் 25, 2022 அன்று கருத்து கூறியதாக செய்தி வெளிவந்தது. அதுகுறித்து தமிழக பா.ஜ.க. எடுத்த நடவடிக்கை என்ன ?
Recommended Video

ஊருக்கு உபதேசம்
அதேபோல, ஏ.பி.வி.பி. தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா தாம் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டார் என்பதை எவரும் மறுக்க முடியாது. சமீபத்தில் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்ட ஏ.பி.வி.பி. மாணவர்களை சிறைக்குச் சென்று சந்தித்ததற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஒரு அரசு மருத்துவராக இருந்து கொண்டு பா.ஜ.க.வின் மாணவர் பிரிவின் தலைவராக இருந்து செயல்படுவதை எந்த சட்டத்தின் அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் அவரை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்தது மிகச் சரியான நடவடிக்கையாகும். ஊருக்கு உபதேசம் செய்யும் அண்ணாமலை, இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு தமிழக பா.ஜ.க. ஆளாகாமல் இருக்கும் வகையில் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும்.
-
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications