Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணமதிப்பிழப்பால் பிரதமர் மோடி எதையும் சாதிக்கவில்லை! பணப்புழக்கம் தான் அதிகரிப்பு! காங்கிரஸ் சாடல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பிரதமர் மோடி எதையும் சாதிக்கவில்லை என்றும் பணப்புழக்கம் தான் அதிகரித்துள்ளது எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி விமர்சித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோத பேரழிவு நடவடிக்கை என்ற குற்றச்சாட்டிலிருந்து பிரதமர் மோடி தப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

2016 நவம்பர் 8

2016 நவம்பர் 8

2016 நவம்பர் 8ல் ஒன்றிய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று ஆறு ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு நேற்று வழங்கியிருக்கிறது. இதில், நீதிபதி பி.வி. நாகரத்தினம்மா பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது செல்லாது என்ற மாறுபட்ட தீர்ப்பை மிகத் தெளிவாக வழங்கியிருக்கிறார்.

தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்

தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்

தீர்ப்பு வழங்கிய மற்ற நான்கு நீதிபதிகள் பணமதிப்பிழப்பு திட்டத்திற்கான அரசின் நோக்கம் எதுவாக இருந்தாலும், மக்கள் படும் அவதி வேதனையாக உள்ளது. அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் தலையிட விரும்பவில்லை என்று கூறியதோடு, இந்த நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி சட்டப் பிரிவு 26(2)-ன்படி மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறியிருக்கிறது. ஆனால், அந்த அதிகாரம் ஒரு குறிப்பிட்ட எண்கள் வரிசை கொண்ட ரூபாய் நோட்டுகளை மட்டுமே பணமதிப்பிழப்பு செய்ய இந்த பிரிவு அனுமதி அளிக்கிறது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

பணமதிப்பிழப்பை பிரதமர் மோடி அன்று அறிவித்த போது சட்டப்படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் எதையும் பின்பற்றப்படவில்லை. ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய பரிந்துரையின் பேரில் தான் மத்திய அரசு செயல்பட முடியும். ஆனால், அதற்கு மாறாக மத்திய அரசு முடிவு செய்து ரிசர்வ் வங்கிக்குப் பரிந்துரை செய்து அதன்மீது பணமதிப்பிழப்பு நடவடிக்கை அவசர அவசரமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த முடிவெடுக்கப்பட்ட போது, மத்திய வாரியத்தில் 10 இல் 7 பதவிகள் காலியாக இருந்தன. மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு ரிசர்வ் வங்கி பணிந்திருக்கிறது.

உண்மைக்குப் புறம்பான

உண்மைக்குப் புறம்பான

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கலில் விரிவான கலந்தாய்வு 8 மாதங்களாக நடந்ததாக கூறியிருக்கிறது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த 2016 நவம்பர் 8 க்கு முன்பு இரண்டு மாதங்கள் வரை ரிசர்வ் வங்கி கவர்னராக டாக்டர் ரகுராம் ராஜன் தான் பொறுப்பிலிருந்தார். அவர் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான நிலை கொண்டிருந்தார். அதற்கு அடுத்து பொறுப்பிற்கு வந்த டாக்டர் உர்ஜித் படேலும் அதே நிலை தான் எடுத்திருந்தார். அதனால், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியபடி விரிவான கலந்தாய்வு நடந்தது என்பது உண்மைக்குப் புறம்பான கருத்து என்பது அம்பலமாகியுள்ளது.

கள்ளப்பணம்

கள்ளப்பணம்

கருப்புப் பண, கள்ளப் பண சந்தைக்காரர்கள் தங்களிடமிருந்த இருந்த கருப்புப் பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்கு தான் மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவியாக செய்திருக்கிறது. பிரதமர் மோடி கூறியபடி கள்ளப் பணமோ, கருப்புப் பணமோ, பயங்கரவாத ஒழிப்பு என்ற எந்த நோக்கமும் நிறைவேறவில்லை.

நோட்டு புழக்கம்

நோட்டு புழக்கம்

பணமதிப்பிழப்பின் போது அறிவிக்கப்பட்ட நோக்கங்கள் நிறைவேறவில்லை என்ற பிறகு, இலக்குகளை மாற்றி இந்த நடவடிக்கையின் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து மக்களிடையே பணப் புழக்கம் குறையும் என்று பிரதமர் மோடி கூறினார். இதன்மூலம் கருப்புப் பணம் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களின்படி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக நாட்டின் மொத்த ரூபாய் நோட்டு புழக்கம் ரூபாய் 17.74 லட்சம் கோடியாக இருந்தது. அது தற்போது அதிகரித்து ரூபாய் நோட்டு புழக்கம் ரூபாய் 32.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

டிஜிட்டல் பணப் பரிமாற்றம்

டிஜிட்டல் பணப் பரிமாற்றம்

எனவே, பிரதமர் மோடி அறிவித்தபடி கருப்புப் பணமோ, கள்ள பணமோ, பயங்கரவாத நடவடிக்கைகளும் குறைந்தபாடில்லை. டிஜிட்டல் பணப் பரிமாற்றம் அதிகரிப்பதற்கு மாறாக மக்களிடையே பணப் புழக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது வரலாறு காணாத பொருளாதாரப் பேரழிவுக்கும், மக்கள் மீது தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதலாகத் தான் அமைந்து விட்டது.

பிரதமர் தப்ப முடியாது

பிரதமர் தப்ப முடியாது

உச்சநீதிமன்ற தீர்ப்பு மத்திய அரசுக்குப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டா இல்லை என்பது குறித்து தான் தீர்ப்பு வழங்கியதே தவிர, இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு குறித்தோ, மக்கள் சந்தித்த துன்பங்கள் குறித்தோ தீர்ப்பில் கூறப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோத பேரழிவு நடவடிக்கை என்ற குற்றச்சாட்டிலிருந்து பிரதமர் மோடி தப்ப முடியாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+