வீட்டு வசதி வாரிய முறைகேடு- வசமாக சிக்கிய ஓய்வு பெற்ற ஐபிஎஸ் ஜாபர் சேட் .. அப்படி கோலோச்சியவர்!
சென்னை: தமிழக வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு பெற்று அதை விற்பனை செய்து சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவியின் சொத்துகள் அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின் சொத்துகளும் பறிமுதலாகி இருக்கிறது.
தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய ஆட்சி அமையும் போது முந்தைய ஆட்சிக்கு நெருக்கமான காவல்துறை அதிகாரிகள் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சென்னையில் இருந்து தூக்கி அடிக்கப்படுவது வழக்கம். அப்படி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அதிகாரவர்க்கத்துக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர்தான் ஜாபர் சேட்.. அதனாலேயே 2011-ல் ஜெயலலிதா முதல்வரான போது ராமநாதபுரத்துக்கு தூக்கி அடிக்கபட்டார் ஜாபர் சேட்.

திமுக ஆட்சியில் எல்லாமும் ஜாபர் சேட்
ஜாபர் சேட்.. 2006- 2011-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் ஜெகஜோதியாக கோலோச்சியவர்.. முதல்வராக மறைந்த கருணாநிதி பதவி வகித்த காலத்தில் சீனியர் அமைச்சர்கள்.. இத்தனைக்கும் கருணாநிதியுடன் பல ஆண்டுகளாக நெருங்கிய சீனியர்கள் கூட ஜாபர்சேட் கண்டு ஜெர்க் ஆன சம்பவங்கள் உண்டு. அப்போதைய திமுக ஆட்சியில் அனைத்தையும்.. அனைத்தையும் ஜாபர்சேட் என்ற ஒற்றை ஐபிஎஸ் அதிகாரியை ஆளும் வர்க்கம் முழுமையாக நம்பி ஒப்படைத்தது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் உருண்ட தலை
அதனால்தான் திமுகவை ஆட்டுவித்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஜாபர்சேட் பெயரும் அடிபட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை தமிழகத்தில் முறைகேடாக முதலீடு செய்ய ஜாபர்சேட் உதவினார் என்றெல்லாம் புகார்கள் பறந்தன. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் போது ஜாபர்சேட் பேசியதாக ஆடியோக்கள் வலம் வந்தன. ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆதாரங்களை அழிப்பதில் ஜாபர்சேட் முதன்மை பங்கு வகித்தார் எனவும் சொல்லப்பட்டது.

தேர்தல் ஆணையத்துடன் மோதல்
இத்தனை புகார்களுக்கு மத்தியில்தான் 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தமிழக முதல்வராக ஜெயலலிதா அமர்ந்த உடன், மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரியாக, உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் மாற்றப்பட்டது. அதற்கு முன்னதாகவே சட்டசபை தேர்தலின் போது ஜாபர் சேட் மீது ஏராளமான புகார்களை தேர்தல் ஆணையம் வாங்கி அலுத்துப் போனது. அதனால் ஜாபர்சேட்டை மேற்கு வங்கத்தில் பணிபுரிய சொன்னது தேர்தல் ஆணையம். அதை ஏற்க மறுத்து விடுப்பில் சென்றார் ஜாபர் சேட். இப்படி இடைவிடாத சர்ச்சைகளில் சிக்கியவர் ஜாபர் சேட்.

தூக்கி அடித்த ஜெயலலிதா- கொந்தளித்த கருணாநிதி
2011-ல் அதிமுக ஆட்சியில்தான் வீட்டு வசதி வாரிய முறைகேடு தொடர்பாக ஜாபர் சேட் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. அப்போது ஜாபர் சேட்டுக்கு ஆதரவாக மறைந்த முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், கடந்த கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் புலனாய்வுத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பணியாற்றியவர் தான் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர்சேட், ஐ.பி.எஸ். அரசுக்கு எந்த அளவிற்கு உண்மையாக, விசுவாசமாக பணியாற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு அவர் பணியாற்றினார் என்பது உண்மை. ஆனால் தற்போதுள்ள ஆட்சியினர் நேர்மையாகவும், திறமையாகவும் பணி புரிந்ததையே ஒரு குற்றமாக எடுத்துக் கொண்டு, நீ எப்படி அரசுக்கு விசுவாசமாகப் பணியாற்றலாம்? அது தவறல்லவா? அதனால் நீ இருக்க வேண்டிய இடம் மண்டபம் முகாம் தான்! எனவே உன்னை அங்கே மாற்றுகிறேன் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; பழி வாங்கும் அஸ்திரம் பாய்ந்துள்ளது.

பழிவாங்குவதாக சொன்ன கருணாநிதி
இந்த அரசாங்கம் பழி வாங்கும் நடவடிக்கைக்கு உச்சக் கட்டமாகச் சென்று, இந்தக் குறிப்பிட்ட அதிகாரியைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்ததோடு, அவர் மண்டபம் முகாமிலேதான் பணி நீக்கக் காலத்திலே இருக்க வேண்டும், சென்னையிலே உள்ள அவரது குடும்பத்தினரோடு இருக்கக் கூடாது என்றால் அதற்கு என்ன பெயர்? அதிலும் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர். தற்போது அவர்களுக்கு நோன்பு காலமாகும். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தினரைக் காணக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுவது எந்த அளவிற்கு நெறிக்குட்பட்டது? ஏன் இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள்? என ஆவேசமாக கூறியிருந்தார்.

அதிரடி அமலாக்கத்துறை
கருணாநிதியை டென்ஷனாக்கும் அளவுக்கு ஜாபர் சேட் மீது போடப்பட்ட வழக்கு என்பது, வீட்டு வசதி வாரியத்தில் சமூக சேவகர் என்ற பெயரில் ஜாபர் சேட் மனைவி நில ஒதுக்கீடு பெற்றார். அப்போது அமைச்சராக இருந்தவர் இன்றைய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி. அப்படி நிலம் பெற்ற ஜாபர் சேட் மனைவி, அதனை விற்பனை செய்தார் என்பது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு. இப்படி விற்பனை செய்ததில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார் ஜாபர்சேட் மனைவி என்பது அமலாக்கப் பிரிவு வழக்கு. இதில் ஜாபர் சேட் மனைவியுடன் சேர்த்து குற்றம்சாட்டப்பட்டிருப்பவர் கருணாநிதியின் உதவியாளராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications