முழு ஊரடங்கு காரணமாக தேர்வு ஒத்திவைப்பு - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
சென்னை: கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அன்று நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலைப் பணிகளுக்கான தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப் பட்டுள்ள நிலையில் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

நாளை கட்டிடக்கலை திட்ட உதவியாளர் பணிக்கான தேர்வும், ஜனவரி 9ஆம் தேதி ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிக்கான தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஜனவரி 9ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி 11-ஆம் தேதி அதாவது செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட்டுகளை வைத்து தேர்வாளர்கள் இந்த தேர்வுகளை எழுதலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.
அதேநேரத்தில் நாளை நடைபெற உள்ள கட்டிடக்கலை திட்ட உதவியாளர் பணிக்கான தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் கூறியுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications