TNPSC 2022 : டிஎன்பிஎஸ்சி - குரூப் 4, விஏஓ முதல் சுற்றுலாத்துறை வரை எந்த மாதத்தில் அரசுத் தேர்வு
குரூப் 2, குரூப் 4, விஏஓ முதல் சுற்றுலாத்துறை வரைஅரசு வேலை யாருக்கு கிடைக்கும் ஜாதகத்தில் எந்த கிரகம் சேர்ந்திருந்தால் என்ன மாதிரியான வேலை செய்யலாம் என்று பார்க்கலாம்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: டிகிரி படித்து முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருந்தவர்களுக்காக டிஎன்பிஎஸ்சியில் இருந்து முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2022ஆம் ஆண்டு எந்த மாதத்தில் எந்த பணிகளுக்கு தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் உத்தேச திட்ட அறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022 வரை எந்த பணிகளுக்கு எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும் என்று பார்க்கலாம்.

- கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர் ஜனவரி
- இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை-1 ஜனவரி
- ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -II பிப்ரவரி
- நகர் ஊரமைப்புத் துறையில் உதவி இயக்குநர் பிப்ரவரி
- ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் மார்ச்
- சமூகப் பாதுகாப்பு துறையில் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர் மார்ச்
- ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- IV மார்ச்
- சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உளவியலாளர் ஏப்ரல்
- இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை - III ஏப்ரல்
- இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை - IV ஏப்ரல்
- தொல்லியல்துறையில் இளநிலை கல்வெட்டாய்வாளர் மே
- சமூகநல மற்றும் மகளிர் உரிமைத் துறையில் உதவி இயக்குநர் மே
- தமிழ்நாடு மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி மே
- தொகுதி- V A பணிகள் ஜூன்
- ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I ஜூன்
- மருத்துவக் கல்வித்துறையில் உள்ள அரசு மறுவாழ்வு நிறுவனம் மற்றும் செயற்கை மூட்டு மையத்தில் தொழில்முறை ஆலோசகர் ஜூன்
- வனத்துறையில் வனத் தொழில் பழகுநர் ஜூலை
- தமிழ்நாடு சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் சிறை அலுவலர் ஜூலை
- தமிழ்நாடு சட்டமன்றப் பணிகளில் ஆங்கில நிரூபர் மற்றும் தமிழ் நிரூபர் ஜூலை
- ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - III ஆகஸ்ட்
- ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கானத் தேர்வு ஆகஸ்ட்
- மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் மீன் வள ஆய்வாளர் மற்றும் மீன்வள உதவி ஆய்வாளர் செப்டம்பர்
- பள்ளிக் கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் செப்டம்பர்
- பொது சுகாதார பணிகளில் சுகாதார அலுவலர் செப்டம்பர்
- மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையில் உதவிப் பேராசிரியர் அக்டோபர்
- கல்லூரி கல்வித்துறையில் நிதியாளர் அக்டோபர்
- மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் இளநிலை மறுவாழ்வு அலுவலர், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் மற்றும்
- முடநீக்கு தொழில் நுட்பாளர் மற்றும் பேச்சு பயிற்சியாளர் நவம்பர்
- தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் வேளாண்மை அலுவலர் நவம்பர்
- வனப் பணிகளில் உதவி வனப் பாதுகாவலர் நவம்பர்
- தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் பணிகளில் உதவி முறைப் பொறியாளர் மற்றும் உதவி முறைப் பகுப்பாய்நர் டிசம்பர்
- ஒருங்கிணைந்த நூலகர் பணிகள் டிசம்பர்
- தமிழ்நாடு பொதுப் பணிகளில் சுற்றுலா அலுவலர் டிசம்பர்












Click it and Unblock the Notifications