சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குரூப் 2 தேர்வில் தவறான கேள்விகள்? டிஎன்பிஎஸ்சி விளக்கம்.. முடிவுகள் எப்போது?முக்கிய தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ் குருப் 2 தேர்வு குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2, 2ஏ தேர்வுகள் நேற்று நடைபெற்றது. இதில் குரூப் 2 பிரிவில் 116 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 5,413 காலியிடங்களுக்கும் தேர்வுகள் நடைபெற்றது.

5 ஆயிரத்திற்கும் அதிகமான இந்த பணியிடங்குக்கு சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர்.

‛யூனியன்’ பிரதேசம் என்பது ‛ஒன்றிய’ பிரதேசமானது... டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளில் மொழிப்பெயர்ப்பு ‛யூனியன்’ பிரதேசம் என்பது ‛ஒன்றிய’ பிரதேசமானது... டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளில் மொழிப்பெயர்ப்பு

தேர்வு

தேர்வு

இந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்-பதிவாளர் உள்ளிட்ட நேர்முகத் தேர்வு அடங்கிய 116 காலிப் பணியிடங்களுக்கும், நகராட்சி ஆணையர், உதவி அலுவலர் உட்பட 5,413 நேர்முகத் தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கும் முதல்நிலைத் தேர்வு நேற்றைய தினம் நடைபெற்றது.

 9.94 லட்சம் பேர்

9.94 லட்சம் பேர்

தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் 11.78 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதத் தகுதி பெற்று இருந்தனர். நேற்று காலை சரியாக 9.30 மணிக்குத் தொடங்கிய இந்தத் தேர்வு மதியம் 12.30 மணிக்கு நிறைவடைந்தது. தேர்வுக்குப் பதிவு செய்தவர்களில் சுமார் 1.80 லட்சம் பேர் இந்தத் தேர்வுக்கு வரவில்லை. தமிழகம் முழுவதும் 9.94 லட்சம் பேர் இந்தத் தேர்வை நேற்று எழுதினர்.

 டிஎன்பிஎஸ்சி விளக்கம்

டிஎன்பிஎஸ்சி விளக்கம்

இதனிடையே நேற்று நடைபெற்ற குரூப், குரூப் 2 ஏ தேர்வில் சில கேள்விகள் தவறாக இருந்ததாகத் தகவல் வெளியானது. சில கேள்விகளுக்கான மொழிபெயர்ப்பில் பிழை இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. அதில் குரூப் 2, குரூப் 2 ஏ கேள்வித்தாள்களில் தவறான கேள்விகள் எதுவும் இடம் பெற வில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல மொழிபெயர்ப்பிலும் தவறு இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

 விடை குறிப்பு

விடை குறிப்பு

நேற்று நடைபெற்ற இந்த குரூப் 2, மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான தற்காலிக வினைக்குறிப்புகளை அடுத்த 5 நாட்களுக்கும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் விடைக் குறிப்பில் எதாவது ஆட்சேபனை இருந்தால், அதைத் தெரிவிக்க ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

 தேர்வு முடிவுகள்

தேர்வு முடிவுகள்

மேலும், விடைத்தாள் மதிப்பீடு பணிகள் முடிந்த பிறகு குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வரும் ஜூன் மாத இறுதியில் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுவோரில் ஒரு காலியிடத்திற்கு 10 பேர் என்ற வீதத்தில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். வரும் செப். மாதம் முதன்மைத் தேர்வை நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.

English summary
TNPSC Group 2 and Group 2A answer key releasing date: (டிஎன்பிஎஸ்சி குருப் 2 தேர்வில் இடம் பெற்றிருந்த தவறான கேள்விகள்) All things to know about TNPSC Group 2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X