சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்து தேர்வு..முதல் முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வு

தமிழ்நாடு முழுவதும் இன்று 2022ம் ஆண்டிற்கான நேரடி காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு நேரடி எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்த தேர்வு நடைபெறுகிறது. முதல் முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடைபெறுகிறது.

Recommended Video

    காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்து தேர்வு..

    காவலர், உதவி ஆய்வாளர் தேர்வுகளுக்கான விதிகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின்படி, தமிழ் தகுதி தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு கணக்கில் கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

    TNUSRB SI Recruitment 2022: Written examination for the post of Sub Inspectors of Police

    காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு பிரிவுகளாக தேர்வு நடைபெறுகிறது. காலையில் எழுத்துத் தேர்வும் , பிற்பகலில் முதல் முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வும் நடைபெறுகிறது.

    தேர்வு எழுத வருபவர்கள் 8:30 மணிக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு வர வேண்டும் . தேர்வு எழுத வரும்போது பால் பாயின்ட் பென் , ஹால் டிக்கெட் , ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும்.

    அதே சமயம் செல்போன், கால்குலேட்டர் ,லேப்டாப் போன்ற மின்னணு சாதன பொருட்கள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று காவல் துறைக்கான சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 939 தேர்வர்கள் பெண்கள் மட்டும் இன்று பங்கேற்றனர். இவர்கள் அனைவரையும் இன்று காவல்துறையினர் பலத்த பரிசோதனைக்குப் பிறகு பரிசோதனையில் செல்போன், பென்சில், போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள், எவையும் தேர்வு மையத்துக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடுகள் வைத்து தேர்வு மையத்திற்கு உள்ளே அனுப்பி வைத்தனர், தேர்வு மையத்தில் திருவள்ளூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி ஜோசுராஜ் தலைமையிலான 200 மேற்பட்ட போலீசார் பலத்த கட்டுப்பாடுகளுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்

    தமிழகத்தில் 444 நேரடி எஸ்.ஐ., பதவிக்கான எழுத்து தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 7246 பேர் எழுதுகின்றனர்.திண்டுக்கல் செயின்ட் ஜோசப் பள்ளி, பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி, சக்தி கல்லுாரி உட்பட 8 இடங்களில் காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி, மாலை 3:00 முதல் 5:10 மணி வரை இரு பிரிவாக நடக்க உள்ளது.நாளை (ஜூன் 26) நடக்கும் தேர்வை திண்டுக்கல்லை சேர்ந்த 888 போலீசார் எழுத உள்ளனர்.தேர்வு அறை, வளாக கண்காணிப்பு பணியில் எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில், 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 8 டி.எஸ்.பி.,க்கள் உட்பட 500 பேர் ஈடுபட உள்ளனர். எழுத்துத் தேர்வை முன்னிட்டு தேர்வர்கள் கைப்பேசி கை கடிகாரம் மற்றும் பைகள் கொண்டு செல்ல தடை வீட்டில் அனைவரும் பரிசோதனைக்கு பின்னர் அவரவர் மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். தேர்வர்கள் நீண்ட வரிசையில் நின்று பரிசோதனை செய்த பின் மையங்களுக்கு சென்றனர்.

    English summary
    Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) SI exam is held for the selection of Sub-inspector at posts of Taluk, Armed Forces, and Special Forces of Tamil Nadu.The direct written examination for the post of Sub Inspector of Police is being held today. Tamil language qualifying examination is being held for the first time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X