ஒவ்வொரு வார்டுக்கும் 5 பெண்கள்.. இனி ரெய்டு விடப்போறாங்க.. சென்னை பட்ஜெட்டில் பிரியா அதிரடி
சென்னை: சென்னை மாநகராட்சி 15 வார்டுகளில் தலா 5 பேர் கொண்ட குழுவை சுயஉதவிக்குழுக்கள் மூலம் நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் மாடுகள் வளர்க்க கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் அதையும் மீறி பலர் மாடு வளர்த்து வருகின்றனர். அதோடு அதை சாலையிலும் விடும் வழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட சென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டியதில் 4ம் வகுப்பு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 10ம் தேதியன்று பிற்பகல் 3 மணியளவில் மாணவி பள்ளியை முடித்துக்கொண்டு மாணவி தனது தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று மாணவி மீது பாய்ந்தது. சுமார் 2 நிமிடங்களுக்கும் மேல் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் மாணவியின் முகம், வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து வரிசையாக பல இடங்களில் மக்கள் மாடு தாக்கி காயம் அடைந்தனர்.
நங்கநல்லூர், ஆலந்தூர் பகுதிகளில் அடிக்கடி மாடுகள் இப்படி மக்களை தாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக முன்பே எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதில் , சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயமடைந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதோடு சாலையில் மாடுகளை விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தார். அதன் ஒரு பகுதியாக, சென்னை, திருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
ஆய்வு செய்ய சென்ற மாநகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாடு உரிமையாளர்கள், மாடுகளை பிடித்து செல்ல கூடாது என்று கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவர்களுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. அதோடு விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாடு உரிமையாளர்களுக்கு ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விதித்தார்.
பட்ஜெட் திட்டம்: இந்த நிலையில்தான் சென்னை மாநகராட்சி 15 வார்டுகளில் தலா 5 பேர் கொண்ட குழுவை சுயஉதவிக்குழுக்கள் மூலம் நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் மூலம் மாடுகளை கண்காணிக்க, கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சிக்கான 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. சென்னை மாநகர பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். 2024- 25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார் மேயர் பிரியா.
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல ரூ.47.25 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்படும். சென்னை மாநகராட்சியில் 2024-25ம் ஆண்டு முதல் மாமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.45 லட்சமாக உயர்த்தப்படுகிறது. தொடக்க பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு ரூ.3.59 கோடி மதிப்பீட்டில் 1 செட் Shoe மற்றும் 2 செட் Socks வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தண்ணீர் ஒழுகாமல் இருக்க வாட்டர் ப்ரூப் திட்டம் செயல்படுத்தப்படும. சென்னை பள்ளிகள் மறுசீரமைப்பு பணிக்கு ரூபாய் 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 21 பள்ளிகளுக்கு இந்த திட்டத்தால் பலன் கிடைக்கும்.
சென்னையில் 19 விளையாட்டு திடல்கள் ரூ.5 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications