Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 1500ஐ தாண்டிய கொரோனா .. சென்னையில் எகிறிய பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 1515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31667 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 8வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று 1515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்குள் மட்டும் 1497 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் 1155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22149 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 135 பேருக்கும், திருவள்ளூரில் 55 பேருக்கும், தூத்துக்குடியில் 14 பேருக்கும், மதுரையில் 14 பேருக்கும், விழுப்புரத்தில் 11 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 11 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் 7 பேருக்கும், திருவண்ணாமலையில் 6 பேருக்கும், கள்ளக்குறிச்சி, கடலூரில் தலா 6 பேருக்கும், ராணிப்பேட்டையில் 10 பேருக்கும், மதுரையில் 10 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 16 பேருக்கும், திருப்பத்தூரில் 6 பேருக்கும், சேலம், தென்காசி, தேனியில் தலா 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் 5 பேருக்கும், திருச்சியில் 4 பேருக்கும், திருநெல்வேலியில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

மொத்தம் எவ்வளவு பேர்

மொத்தம் எவ்வளவு பேர்

தமிழகத்தில் இன்று மட்டும் 604 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஜூன் 7ம் தேதி (இன்று) நிலவரப்படி தமிழகத்தில் 16999 பேர் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 14396 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சென்னையில் தான் மிக அதிகமாக 10982 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மிக அதிகமான சோதனை

மிக அதிகமான சோதனை

ஜூன் 7ம் தேதியான இன்று மட்டும் 16,275 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 5,92,970 சாம்பிள்கள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தனிநபர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் இதுவரை இன்று மட்டும் 15,671 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுடன் சேர்த்து இதுவரை 5,66,314 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனாவால் மரணம்

கொரோனாவால் மரணம்

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 18பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 15 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். வேலூர், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை 269 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்த 18 பேரில் வேலூரில் 20 வயது பெண் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 3 பேர் 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள். மற்ற 14 பேர் 50 வயதை கடந்தவர்கள் ஆவர்.

ஆண் பெண் விவரம்

ஆண் பெண் விவரம்

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,515 பேரில் 945 பேர் ஆண்கள், 570 பேர் பெண்கள் ஆவர், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 31,667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 19,634 பேர் ஆண்கள், 12,016பேர் பெண்கள், 17 பேர் திருநங்கைகள் ஆவர். ஜூன் 7ம் தேதி நிலவரப்படி 14,396* பேர் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+