தமிழகத்தில் இன்று 5,175 பேருக்கு கொரோனா உறுதி... ஒரே நாளில் 112 பேர் மரணம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5175 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேநேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 6031 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இது ஆரோக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. அண்மைக்காலமாக பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விரைவில் தொற்று பாதிப்பு தமிழகம் மீளும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 59,156 பேருக்கு 61,166 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதேபோல் இதுவரை 28,45,406 பேருக்கு 29,53,56 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 5175 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்ந்துள்ளது.

6031 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,031 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,14,815 பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 54184 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். சென்னையில் தான் இன்று மிக அதிகமாக 997 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சென்னையில் அதிகம்
தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 112 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 25 பேரும், கடலூரில் 9 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும், தேனியில் 7 பேரும், வேலூரில் 7 பேரும், மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தலா 6 பேரும், கோவையில் 5 பேரும் இன்று கொரோனாவால் பலியாகி உள்ளனர். ,

சென்னை நிலவரம்
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் இன்று 1044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தான் மிக அதிகபட்சமாக 25 ஒரே நாளில் பலியாகி உள்ளனர். சென்னையில் தற்போது கொரோனா பாதிப்புடன் 11811 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 90966 பேர் இதுவரை சென்னையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

திருவள்ளூரில் 472 பேர்
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் இன்று 487 பேருக்கும், திருவள்ளூரில் 472 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 342 பேருக்கும், தூத்துக்குடியில் 311 பேருக்கும், தேனியில் 278 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூரில் 179 பேருக்கும், கடலூரில் 170 பேருக்கும், கன்னியாகுமரியில் 175 பேருக்கும், கோவையில் 112 பேருக்கும், மதுரையில் 106 பேருக்கும், புதுக்கோட்டையில் 150 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications