இன்று எல்லா மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு.. சென்னையில் அதிகரிக்கும் தொற்று
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 670 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4483 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது- தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 670 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,58,272 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 8,41,250
ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 12,539 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 265 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 57 பேருக்கும், கோவையில் 51 பேருக்கும், திருவள்ளூரில் 44 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எல்லா மாவட்டத்திலும் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருப்பூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் அதிகமாக உள்ளது.
-
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications