இன்று அட்சய திருதியை... நகை கடைகளில் திருவிழா கோலம் - தங்கம் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்
அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளில் தங்கம் விற்பனைக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை: அட்சய திருதியை பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நகைக்கடைகளில் தங்கம் வாங்க ஏராளமானோர் குவிந்துள்ளனர். நகைக்கடைகளில் தங்கம் விற்பனைக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்கம் விலையும் சற்றே குறைந்துள்ளதால் நகை வாங்க மக்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது.
Recommended Video
ஒவ்வொரு மாதத்திலும் வருகிற வளர்பிறை காலத்தில் 3வது திதியாக திருதியை திதி வருகிறது. சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வருகிற திருதியை திதியையே 'அட்சய திருதியை' என்று அழைக்கிறோம். இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை நாளை மே 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அட்சய திருதியை நாளில் செல்வ வளம் பெருகி சிறப்பாக வாழ, மங்களப் பொருட் களில் ஏதேனும் ஒன்றை வாங்குவது நல்லது. ஆலயங்களில் ஏலம் போடும் பொழுது, அதிக விலை கொடுத்து உப்பு வாங்குவார்கள்.
கல் உப்பு வாங்கினால் பணம் சேரும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் அட்சய திருதியை நாளில் பொன், பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் மட்டுமன்றி உப்பு, தானியங்கள், மளிகைச் சாமான்கள் வாங்கலாம்.
மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி வகைகள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, வெண்கல மணி, எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக்கேற்ப வாங்கி வைக்கலாம்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அட்சய திருதியை நேரத்தில் ஊரடங்கால் நகைக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாமல் தவித்தனர். அதே நேரத்தில் ஆன்லைனில் தங்க விற்பனை அதிகரித்தது.
இந்த நிலையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் தற்போது கடைகள் முழு அளவில் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அட்சய திருதியையான இன்றைய தினத்தில், நகைக்கடைகளில் தங்கம் விற்பனைக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2 ஆண்டுகளுக்கு பிறகு அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் விற்பனை நடைபெறுவதால் பொது மக்களும் தங்கம் வாங்க அதிக ஆர்வமாக உள்ளனர். பொது மக்களின் வசதிக்காக சென்னையில் அதிகாலை 4.30 மணி முதலே நகைக்கடைகள் திறக்கப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தங்கம் வாங்க நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications