பயிர்க்காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்... தேவையான ஆவணங்கள் என்னென்ன? விரிவான தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் பயிர்க் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் விவசாயிகள் தங்கள் பயிர்களை உடனடியாக காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்தாண்டு மட்டும் தமிழ்நாட்டில் 34 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதற்காகப் பயிர்க் காப்பீடு செய்ய நவ. 15ஆம் தேதி தான் கடைசி நாள் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பயிர்க் காப்பீடு செய்யக் கடைசி நாள் இன்று நவ.21 வரை நீட்டிக்கப்பட்டது. பெரும்பாலான விவசாயிகள் ஏற்கனவே தங்கள் பயிர்களைக் காப்பீடு செய்து விட்டனர்..
இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகளும் உடனடியாக காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதன் மூலம் இயற்கை பாதிப்புகள் எதாவது ஏற்பட்டால் பொருளாதார ரீதியாக அதில் இருந்து விவசாயிகளால் தப்பிக்க முடியும்.
பயிர்களைக் காப்பீடு செய்யச் சிட்டா அடங்கல், ஆதார், வங்கி தகவல்கள் தேவை என்று கூறப்பட்டு இருந்தது. பயிர்க்கடன் வாங்கியவர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தலாம்.
பயிர்க் காப்பீடு பெறாதவர்கள் பொதுச் சேவை மையங்களில் காப்பீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பயிர்க்காப்பீடு செய்ய மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு குறைவு என்பதால் உடனடியாக விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications