தமிழகத்தில் சுட்டெரித்த வெயில்... சாலையில் ஆம்லெட் போடலாமோ - இப்பவே இப்படியா

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது, தமிழகத்தில் இன்று 9 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தொட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மதுரை, திருச்சியில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 9 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. ஆங்காங்கே வெப்பச்சலனத்தால் மழையும் பெய்து வருகிறது.

சென்னையில் 100 டிகிரி வெப்பநிலையை நெருங்குகிறது வெயில். சென்னை மீனம்பாக்கத்தில் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், நுங்கம்பாக்கத்தில் 96 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும் பதிவாகியுள்ளது. வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பிப்ரவரி இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டது. பல நகரங்களில் அனல்காற்று வீசுகிறது. அதிகபட்ச வெப்பநிலையானது இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லேசான மழை

லேசான மழை

இதனிடையே வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் மேக மூட்டம்

சென்னையில் மேக மூட்டம்

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 23.03.2022 முதல் 25.03.2022 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

 சூறாவளிக்காற்று வீசும்

சூறாவளிக்காற்று வீசும்

இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு அந்தமான் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் கவனம்

மீனவர்கள் கவனம்

23ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்கக்கடல், வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 100 டிகிரி வெப்பநிலை

தமிழகத்தில் 100 டிகிரி வெப்பநிலை

கரூர் பரமத்தியில் 105 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையத்திலும் திருச்சியிலும் 104 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஈரோடு - 102 டிகிரி, வேலூர் - 101 டிகிரி, சேலம் - 101 டிகிரி, திருத்தணி - 101 டிகிரி, நாமக்கல் மற்றும் தஞ்சையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+