தங்கம் விலை விக்கிற தக்காளியால நிலைமை இப்படியாயிருச்சு... ரொம்ப சோதிக்காதீங்க
அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று சொல்வார்கள். அது போல தக்காளி இல்லாமல் எந்த உணவும் சமைக்க முடியாது என்று தெரிந்தும் கூகுளில் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்று தேட ஆரம்பித்து விட்டனர்.
சென்னை: தொடர்கனமழை வெள்ளத்தினால் தக்காளிச் செடிகள் அழுகத்தொடங்கி விட்டன. சந்தைக்கு வரத்து குறைவினால் தக்காளி விலை உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிலோ தக்காளி 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலையைக் கேட்டு இல்லத்தரசிகள் கண்ணீர் விட்டாலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டனர். சமூக வலைத்தளங்களில் உலா வரும் சுவையான தக்காளி மீம்ஸ்களைப் பார்க்கலாம்.
விலைகுறைவினால் தக்காளியை பெட்டி பெட்டியாக கீழே கொட்டிய காலமும் உண்டு. இப்போது விலை அதிகரிப்பால் தங்கம் போல பாதுகாத்து வருகின்றனர்.
மழைக்காலம் முடியும் வரை தக்காளி விலை குறைய வாய்ப்பு இல்லை என்றே வியாபாரிகள் கூறி வருகின்றனர். தக்காளி வாங்குவதற்கு லோன் கொடுத்தாலும் ஆச்சரியமில்லை.

கூகுளில் தேடும் மக்கள்
இந்திய சமையலில் தக்காளி இல்லாமல் ஒரு உணவும் செய்ய முடியாது. பிரபல தேடு பொறியான கூகுளில் தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி ? தக்காளி இல்லாமல் சட்னி செய்வது எப்படி என பலரும் தேடி வருவதாக ஷேர் செய்து வருகின்றனர். தக்காளி அலர்ஜி இருப்பவர்கள் காலம் முழுவதும் இதை தேடினாலும், தக்காளி விலை அதிகமாக உள்ள இந்த கால கட்டத்தில் இந்த மீம்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.

அட்டையில் தக்காளி
தக்காளி ஊறுகாய்தான் அட்டையில் தொங்கும். விக்கிற விலைவாசியில் தாக்காளியே அட்டையில் தொங்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டது.

தக்காளி நசுங்கிருச்சே
தக்காளி தங்கம் போல விற்று வரும் நிலையில கடையில் இருந்து வாங்கிப்போன தக்காளி கை தவறி கீழே விழுந்து நசுங்கி சிதைந்து விட்டது. இது மனதை பாதித்த படம் என்று பகிர்ந்து வருகின்றனர்.

ரொம்ப பெரிய இடம்
பொண்ணு பெரிய இடம்னு எப்படி சொல்ற? காருக்கு பெட்ரோல் போட்டு ஓட்டுறதுனாலயா?!
இல்ல அவங்க வீட்டுல தினம் தக்காளி கூட்டாம் என்று பொறாமைப்படுகிறார் இந்த மீம்ஸ் கிரியேட்டர்.

2கிலோ தக்காளி இருக்கு
இங்க பாத்தியா.. எங்க வீட்ல 2கிலோ தக்காளி இருக்கு.. உனக்கு 1கிலோ தாரேன்.. என்று ஆசை வார்த்தை கூறுகிறார் இந்த மீம்ஸ் கிரியேட்டர்.

தக்காளி சாதம்
தக்காளியை தொங்க விட்டு விட்டு வெறும் சாதத்தை தட்டில் போட்டு சாப்பிடுகின்றனர். தக்காளி சாதம் சாப்பிடுவதை ஆசையோடு ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கின்றனர்.

தக்காளி சட்னி
சப்பாத்திக்கு தக்காளி சட்னி கேட்டாலே, கோதுமை கிலோ எட்டு ரூபாய் தக்காளி கிலோ ரூ.150 என்று உண்மை நிலவரத்தை விளக்குகிறார் இந்த ஏழைத்தாய்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications