மீண்டும் எகிறிய தக்காளி விலை.. கோயம்பேடு சந்தையில் கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு.. இப்போ என்ன விலை?
சென்னை: தக்காளி விலை நேற்று சற்று குறைந்து இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்து அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. முதல் ரக தக்காளி கிலோவிற்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது.
தக்காளி விலை கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. வழக்கமாக ஜுலை - ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி விலை சற்று உயர்வது வழக்கம் தான் என்றாலும் இந்த ஆண்டு தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து அதிர வைத்தது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு 10 ரூபாய் என்கிற அளவில் இருந்தது. ஆனால் தக்காளி விலை விறு விறுவென உயர்ந்து 150 ரூபாயை எல்லாம் தாண்டியது.

இந்த ஆண்டு கடுமையான வெப்பத்தால் விவசாயிகள் தக்காளி சாகுபடியை செய்யாமல் இருந்து விட்டதாகவும், அதனால்தான் இந்த நிலைமை என்றும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. சில நகரங்களில் தக்காளி விலை ரூ.150 ஐ தாண்டி விற்பனையானது. இந்திய கிச்சன்களில் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் தக்காளியை கிலோ கணக்கில் வாங்கிய மக்கள் அனைவரும் தற்போது கால் கிலோ, அரைகிலோ என வாங்க தொடங்கி விட்டனர்.
இதையடுத்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படுகிறது. தக்காளி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காலை 1- 2 மணி நேரம் மட்டுமே ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சம் ஒரு அட்டைக்கு 1 கிலோ மட்டுமே தக்காளி கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தக்காளி விலை காரணமாக ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக காணபப்டும் சூழலே உள்ளது. இதனிடையே நேற்று தக்களி விலை சற்று குறைந்தது. தக்காளி விலை ரூ.90 ஆக குறைந்தது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் போல காஸ்ட்லியாக இருந்த தக்காளி விலை சரிந்து விட்டதே என்ற மகிழ்ச்சியில் வியாபாரிகளும் வழக்கத்தை விட அதிக அளவில் கோயம்பேடு சந்தையில் கொள்முதல் செய்வதை பார்க்க முடிந்தந்து. இந்த நிலையில், இன்று தக்காளி விலை மீண்டும் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இன்று தக்காளி கிலோவிற்கு ரூ.30 உயர்ந்துள்ளது. முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூபாய் 90 ல் இருந்து 120 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சிறிய ரக தக்காளி ஒரு கிலோ ரூ.90 ஆக விற்பனையாகிறது. பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து ரூ 110 ஆக உயர்ந்துள்ளது. பச்சை மிளகாய் கிலோவுக்கு ரூ.50 உயர்ந்து 100 ரூபாயாக விற்பனையாகிறது. தக்காளி விலை மட்டும் இன்றி மேலும் சில காய்கறிகளின் விலையும் மீண்டும் உயர்ந்து இருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications