அதிரடி! அமுதம் அங்காடிகளில் இன்று முதல் மலிவு விலையில் துவரம், உளுத்தம் பருப்பு, தக்காளி! குட்நியூஸ்
சென்னை: அமுதம் அங்காடிகளில் இன்று முதல் மலிவு விலையில் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் அமுதம் பல்பொருள் அங்காடிகளில் இன்று முதல் கொள்முதல் விலைக்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வு காரணமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் அடிப்படை பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக கொள்முதல் விலையில் அமுதம் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் விற்கப்பட உள்ளன.

கடந்த 3 வாரமாக இந்தியா முழுக்க அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக வெங்காயம், தக்காளி விலை வேகமாக உயர்ந்து வந்தது. தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கிய தக்காளியின் விலை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ₹100ஐ எட்டியது.
ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்தது. அதுவே தற்போது வேகமாக உயர்ந்து ஒரு கிலோவுக்கு ₹150 என்ற விலையில், தக்காளியின் விலை சந்தையில் விற்கப்பட்டது. நேற்று 20 ரூபாய் குறைந்து 130 ரூபாய் விற்கப்பட்ட தக்காளி இன்று 120 - 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கலர் பெல் பெப்பர்ஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற வெளிநாட்டு காய்கறிகளை விட தக்காளி விலை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக விற்பனை: இதையடுத்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. உள்ளது. தக்காளி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காலை 1- 2 மணி நேரம் மட்டுமே ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சம் ஒரு அட்டைக்கு 1 கிலோ மட்டுமே தக்காளி கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தக்காளி விலை காரணமாக ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இன்னொரு பக்கம் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் விலையும் உயர்ந்து உள்ளது. இதையடுத்து அமுதம் அங்காடிகளில் இன்று முதல் மலிவு விலையில் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் அமுதம் பல்பொருள் அங்காடிகளில் இன்று முதல் கொள்முதல் விலைக்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள், ரேஷன் கடைகளில் இன்று முதல் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் தக்காளி கொள்முதல் விலைக்கு மக்களிடம் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்யப்பட உள்ளது.
தக்காளி ஒரு கிலோ 60க்கு விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் துவரம் பருப்பு அரை கிலோ 75க்கு விற்பனை செய்யப்படும். உளுத்தம் பருப்பு அரை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
விலை குறைவு: ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டதாக மக்கள் மார்க்கெட்டில் தக்காளி வாங்குவது குறைந்தது. இதனால் மார்க்கெட்டில் தக்காளி தேக்கம் ஏற்பட்டது. தக்காளிக்கான தேவை மார்க்கெட்டில் குறைந்த நிலையில் தானாக ஒரே நாளில் அதிரடியாக தக்காளி விலை குறைந்தது.
அதன்படி கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் நேற்று தக்காளி கிலோவுக்கு ரூ.20குறைந்தது. தக்காளி கிலோ ரூபாய் 120 மற்றும் 130க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பல்பொருள் அங்காடிகளில் மற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுவதால் மற்ற பொருட்களின் விலையும் விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.,
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications